சனி, 21 செப்டம்பர், 2019

#491 - ஐயா வேதத்தில் தமிழில் உள்ள பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மாறுகிறது உதாரணமாக ஜேம்ஸ்.யாக்கோபு, ஜான். யோவான் பவுல்.பால் ஜீசஸ்.இயேசு இப்படி மாறி அழைக்கப்படுகிறது எதற்காக

#491 - *ஐயா வேதத்தில் தமிழில் உள்ள பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மாறுகிறது உதாரணமாக ஜேம்ஸ் - யாக்கோபுஜான் - யோவான், பவுல் - பால், ஜீசஸ் - இயேசு இப்படி மாறி அழைக்கப்படுகிறது எதற்காக?*

*பதில்*
உலகத்தின் எல்லா ஜனங்களும் இரட்சிப்பு அடைய வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் (1யோ. 4:14)

ஆகவே உலகின் அனைத்து மொழிகளிலும் தேவனுடைய வார்த்தையானது அநேக வேதபண்டிதர்களால் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தேவனுக்காக செலவழித்து மொழி பெயர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டது.

மற்ற மொழி பெயர்ப்பை காட்டிலும் தமிழ் வேதாகமத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மூல பாஷையில் / ஒரிஜினலாக எழுதப்பட்ட எபிரேயம், கிரேக்க, லத்தீன் மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தை தான் நாம் வைத்திருக்கிறோம் !!  நம் தமிழ் வேதத்தின் முதல் பக்கத்திலேயே இது எழுதப்பட்டிருக்கும். 

எவ்வளவு பொிய பாக்கியவான்கள் நாம். இந்த அரிய முயற்சியை எடுத்த சீஜன் பால்கு தன் 37 வயதிலேயே மரித்து போனார். (மேலும் விபரத்திற்கு #455ஐ படிக்கவும்)

இங்கிலீஷ் என்று சொல்லாமல் ஆங்கிலம் என்று நாம் மொழிபெயர்த்து சொல்வது போல அந்தந்த நாட்டில் அர்த்தம் மாறாமல்  பெயர் மருவாமல் மொழிபெயர்க்கப்பட்டது.

மேலும் அருளப்பர் (யோவான்), யாகப்பர் (யாக்கோபு), இராயப்பர் (பேதுரு) என்று கத்தோலிக்கர்கள் தமிழில் மொழிபெயர்த்து பொருள் புரியும் வண்ணம் சொல் வழக்கத்திற்க்காக இலகுவாக்கியதையும் அறியவேண்டும்.

*உதாரணத்திற்கு ஜேம்ஸ் / யாக்கோபுவை குறித்து கீழே பார்க்கவும்*.

புதிய ஏற்பாட்டின் கிரேக்க-ஆங்கில அகராதி மற்றும் பிற ஆரம்பகால கிறிஸ்தவ இலக்கியங்கள் (BDAG) யின் அடிப்படையில் (ακώβ (יַעֲקֹב) என்ற பெயர் – பிழையாய் போகாமல் இருக்க பழைய ஏற்பாட்டின் வார்த்தையாகிய இதை கிரேக்க மயமாக்காமல் அந்த வடிவத்தை அப்படியே முன்னெடுத்தார்கள் - ακούβ.

கிரேக்க சொல் அகராதியின் வடிவம் οςβος, நவீன எழுத்துக்களோடு άκουβος கிரேக்கமயமாகி ακώβ என்றானது.

பழைய ஏற்பாட்டில் சாதாரண ஆங்கில மொழிபெயர்ப்பாகிய  ESV versionல் “ஜேக்கப்”; “ஜேம்ஸ்” இருக்காது.

இயேசுவின் தந்தைவழி தாத்தா (மத் 1: 15) பற்றிய இரண்டு குறிப்புகளைத் தவிர, முன்னோர்களின் எப்போதும் புதிய ஏற்பாட்டின் 26x இல் “ஜேக்கப்” நிகழ்கிறது.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை சரிபார்க்க BDAG கூறுகிறது;

எழுத்து வடிவ முன்னேற்றத்தின் அடிப்படையில் மொழிகள் மாறினதால் ஜேக்கப்” இலிருந்து “ஜேம்ஸ்” க்கு மாறுபட்டது என்று தொடர்பு படுத்தமுடியும்.

    லத்தீன்: “ஐகோபஸ்” (அல்லது “ஜேக்கபஸ்”)
    மறைந்த லத்தீன்: “ஐகோமஸ்” (பி மற்றும் மீ இதேபோல் ஒலித்தது)
    லத்தீன் வுல்கேட் மொழிபெயர்ப்பு : “ஐகோப்”
    மத்திய ஆங்கிலம்: ஜாகோமஸ்

பிரெஞ்சு மொழி “ஜெம்ம்ஸ்” என்பது “ஜேம்ஸ்” ஆனது என்று கூறுகிறது.

பழைய வெப்ஸ்டர்ஸ் அகராதி “ஜேம்ஸ்” பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறுகிறது, இது மறைந்த லத்தீன் “ஜேக்கபஸிலிருந்து பெறப்பட்டது. "

விக்கிபீடியா கூறுகிறது, “ஐகோபஸ்> வளர்ச்சி பெற்று ஐகோமஸ் என்பது வின் ஒலி பி (அதாவது, இடைநிலை * ஐகோம்பஸ்) ஐ ஒருங்கிணைப்பதன் விளைவாக இருக்கலாம் என்றும் அதன்பிறகு பி தன் ஒலி வடிவத்தை இழப்பதன் மூலம் கொத்தாmb எளிமையானது என்றும் சொல்லப்படுகிறது. எம் என்று அழுத்தி உச்சரிக்கும் போது எம்ப் என்று முடிவதை சொல்லிபார்க்கவும் !!

ஒருவேளை என் தமிழாக்கம் சரியாக புரியாதவர்கள் அதன் ஆங்கில வடிவை கீழே படித்து புரிந்து கொள்ளவும்:

[ Wikipedia says, “The development Iacobus > Iacomus is likely a result of nasalization of the o and assimilation to the following b (i.e., intermediate *Iacombus) followed by simplification of the cluster mb through loss of the b.”]


கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு வந்த போது ​​“ஜேம்ஸ்” என்ற பெயர் உறுதியாக நிறுவப்பட்டது. அவர்கள் “யாக்கோபுக்கு” ​​பதிலாக அதைப் பயன்படுத்தினர்.

ஒருமித்த கருத்து என்னவென்றால், இந்த பெயர் எபிரேய மொழியில் இருந்து கிரேக்க மொழியில் இருந்து லத்தீன் மொழியிலிருந்து பிரெஞ்சு மொழியிலும் இறுதியாக ஆங்கிலத்திலும் செல்கிறது.

மேலும் இது மாற்றங்களின் தொடர்ச்சியாகும் : யாகாகோவ் (எபிரேயம்) ஐகோபஸ் (கிரேக்கம்) ஐகோமஸ் (லத்தீன்) ஜாம்ஸ் (பழைய பிரெஞ்சு) ஜேம்ஸ் (ஆங்கிலம்).

(ஆதாரம் www.billmounce.com வலை தளத்திலிருந்து பெறப்பட்டது)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக