#492 - *பெந்தேகோஸ்தே நாளன்று எல்லாரும் மொத்தமாக பேசினார்கள்* என்பதால் 1கொரி1 14ம் அதிகாரம் 27-29ம் வசனம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்ற கருத்து.
அப் 2:4 ன்படி - அவர்களெல்லாரும்
பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே
வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
ஒரே நேரத்தில் 120 பேர் அந்நியபாஷையில் பேசுகின்றார்கள்
இது என்ன பிரதர்?
நீங்கள் #256ற்கான பதிவில் சொன்னதற்கு முரணாக உள்ளதே?
2வது நபரின் கேள்வி: பெந்தகோஸ்தே நாளில் 120 பேரும் ஒருமித்து தானே பல
பாஷையில் பேசினார்கள்.
*பதில்*
இந்த
கேள்விக்காய் நான் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். கேட்ட இரு சகோதரருக்கும் என்
மனமார்ந்த நன்றிகள் பல.
இந்த
கேள்வி – 2 பகுதிகளை கொண்டுள்ளது.
*கேள்வியின்
முதல் பகுதி* :
பெந்தேகோஸ்தே
நாளன்று எல்லாரும் மொத்தமாக பேசினார்கள் என்பதால் 1கொரி 14ம் அதிகாரம் 27-29ம்
வசனம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்ற கருத்து.
*கேள்வியின்
இரண்டாம் பகுதி* :
120
பேர் அந்நிய பாஷையில் பேசினர் என்பது வேதத்தின் படி நன்கு ஆராய்ந்து புரிந்து கொள்ள
வேண்டிய ஒரு முக்கியமான பகுதி.
முதல்
பகுதிக்கான பதில் நீளமான பதிவாக இருப்பதால் இந்த பதிலை அடுத்த எண்ணிக்கையில்
எழுதுகிறேன் (#493ஐ பார்க்கவும்)
*கேள்வியின்
முதல் பகுதிக்கான பதில்* :
பெந்தேகோஸ்தே
நாளன்று எல்லாரும் மொத்தமாக பேசினார்கள் என்பதால் 1கொரி 14ம் அதிகாரம் 27-29ம்
வசனம் எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்ற கருத்து.
வேதத்தில்
பெந்தெகோஸ்தே என்றால் சபை அல்ல –
அது 50ம் நாள் திருவிழா என்று பொருள் – அந்த நாளிலே அனைத்து தேசத்து யூதரும்
மற்றும் யூதமாரக்கத்தமைந்தவரும் (யூதராக மாறியவர்கள்) தங்கள் நியாயபிரமாணத்தின்படி
எருசலேமில் கொண்டாட கூடிவந்தார்கள் (அப் 2:10, லேவி 23:15-21)
புளிப்பில்லா
அப்பப் பண்டிகையின் முடிவில் (சனிக்கிழமை) 50
நாட்கள் கணக்கிடப்படுவதால், பெந்தெகொஸ்தே
நாள் எப்போதும் வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை) விழுந்தது.
அன்றைய
தினம் பரிசுத்த ஆவியானவர் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் (சப்தம்) போல வானத்திலிருந்து
சடிதியாய் (உடனடியாய்) இறங்கி அந்த வீடு முழுவதும் நிரப்பிற்று. (அப் 2:2)
மேலும்
அக்கினிமயமான (அக்கினியை போல) நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்கு “காணப்பட்டு”
அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது (அப் 2:3)
அவர்களெல்லாரும்
பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு,
ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு
பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். (அப் 2:4)
தேவனுடைய
இராஜ்ஜியமாகிய சபையானது துவங்கப்பட்ட நாள் இது என்பதை வேதத்தில் பார்க்கிறோம். வசனங்களை
படிக்கவும். மத் 16:18, ஏசா
2:2-3, தானி 2:44, கொலோ 1:13)
அன்றைய
தினத்தில் 3000 பேர் ஞானஸ்நானம் எடுத்தபோது
"இரட்சிக்கப்பட்டவர்களை கர்த்தர் *சபையில்* சேர்த்தார்"
என்று அறிகிறோம்
(அப்போஸ்தலர் 2:47).
சபையை
(இராஜ்ஜியத்தை) எப்படி நடத்த வேண்டும் என்ற போதனையை அப்போஸ்தலருக்கு தாம் உயிரோடெழுந்த
பின்பு கிறிஸ்துவானவர் அவர்களுக்கு பிரத்யட்சமாக போதித்திருந்தார் (அப் 1:3)
சபை
ஸ்தாபிக்கபட்ட பிற்காலங்களில் உதவிக்காரர்கள் அவசியப்படுவதை உணர்ந்த போது அப்போஸ்தலர்கள்
–
அதற்கு வகையறுத்தனர் (அப் 6:2-3)
மேலும்
புதியதாக கிறிஸ்துவுக்குள் வந்த புறஇனத்தினர் தங்களை போல யூத முறைகளையும் கடைபிடிக்க
வேண்டும் என்று சிலர் போதிக்க துவங்கி சபையின் சட்டதிட்டங்களை கலக்கிய போது அப்போதும்
அப்போஸ்தலர்கள் எருசலேமில் கூடி அது தவறு என்றும் எவைகளை பற்றிக்கொள்ளலாம் என்றும்
விவரித்தனர் (அப் 15:5-20)
இவ்வாறு
சபையின் தொழுகை எவ்வாறு நடைபெற வேண்டும் எவ்வாறு நடைபெறகூடாது என்ற கேள்வியும்
பிரச்சனைகளும் எழுந்த போது அவைகளை அவ்வப்போது சரிசெய்து முழுமையான சட்டமாக்கினர்
அப்போஸ்தலர்கள் 1கொரி முழுவதும் கேள்வி பதிலாக அமைந்த ஆராதனை ஒழுங்குமுறைக்கான / கிறிஸ்தவ
வாழ்க்கைக்கான ஒரு சட்ட புத்தகம் என்றால் மிகையாகாது.
மேலும்
துவக்க நாளில் நடந்த சம்பவத்தில் *மிக மிக கவனமாக கவனிக்க வேண்டிய* விஷயங்கள் :
1-அவர்கள்
பேசியதை அங்கு கூடியிருந்தவர் *அனைவரும்* என்ன பேசினார்கள் என்பதை புரிந்து கொண்டனர்
(அப் 2:6)
2-அவர்கள்
தங்கள் தங்கள் ஜென்ம பாஷையில் (ஆங்கிலத்தில் Slang என்பர் - நாம் கோவை தமிழ் சென்னை
தமிழ் குமரி தமிழ் என்று சொல்வது போல்) கேட்டு புரிந்து கொண்டனர் (அப் 2:8)
3-அவர்கள்
பேசின உட்கருத்தையும் அதாவது தேவனுடைய மகத்துவங்களை பேசுகிறதையும் உணர்ந்தார்கள்
(அப் 2:11)
இந்த
நாளின் சம்பவம் ஒரு தொழுகை அல்ல –
அது சபை ஸ்தாபிக்கட்ட நாள்.
சபையானது
வளர்ந்த போது –
ஆராதனை
ஒழுங்கு முறை படுத்தபடுகிற போது கடைபிடிக்கும்படியாக கூடியிருக்கும் வேளையில்
ஒருவர் பேசிய பின் மற்றொருவர் பேசினால் அது கேட்பவருக்கு பக்தி விருத்தியை
உண்டாக்கும் என்று வலியுறுத்தினார் (1கொரி 14:22, 26, 30)
*கேள்வியின்
இரண்டாம் பகுதிக்கான பதில்* :
120
பேர் அந்நிய பாஷையில் பேசினர் என்பது வேதத்தின் படி நன்கு ஆராய்ந்து புரிந்து கொள்ள
வேண்டிய ஒரு முக்கியமான பகுதி.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக