#448 - *இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் - “எப்படி இது”? கொஞ்சம் விளக்கவும்*...
#438-ம் பதிலில் நீங்கள் ... இக்கால அநேக சபைகள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் !! அதாவது விடுதலையானபின் தீர்ப்பு எழுதுகிறார்கள் !! வேதத்தின் படி அது தவறு... ஞானஸ்நானம் எடுத்து தான் இரட்சிப்பு !! நீங்கள் அப்படி எடுக்கவில்லை என்றால் காலம் தாழ்த்த வேண்டாம்.. அபரிதமான நீர் எங்கும் உள்ளது. நல்ல உண்மையான சத்தியத்தை சொல்லும் சபையை பார்த்து தேவன் அருளிய பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ளவும் என்று எழுதியுள்ளீர்கள் - *எப்படி இது கொஞ்சம் விளக்கவும்*...
*பதில்*
:
இக்கால
அநேக கிறிஸ்தவ மதத்தினர் இரட்சிக்கப்பட்டு விட்டோம் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை
என்று சொல்வார்கள்.
ஒரு
குறிப்பிட்ட நாளில் நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன் அன்றே இரட்சிக்கப்பட்டு
விட்டேன். இயேசு என் உள்ளத்தில் வந்து விட்டார் என்பார்கள். ஞானஸ்நானம் எடுக்கும்படி
இயேசு எனக்கு இன்னும் உத்தரவு கொடுக்கவில்லை என்பார்கள்.
அதே
பாணியில் பல பிரசங்க மேடைகளும் அதையே பிரசங்கிப்பார்கள்.
இரட்சிக்கப்பட்டு
ஞானஸ்நானம் எடுத்தவர்கள் முன்பு வரவும்
இரட்சிக்கப்பட்டு
ஞானஸ்நானம் எடுத்தவர்கள் பந்தியில் வாருங்கள்
இரட்சிக்கப்பட்டு
ஞானஸ்நானம் எடுத்தவர்கள் சபை பொறுப்புகளில் இருக்கலாம் என்று சொல்வார்கள்.
இரட்சிப்பு
என்பது ஞானஸ்நானம் எடுத்தபின் என்று மாற்கு 16:16ல் பார்க்கிறோம்.
அவர்களே
விசுவாசித்தால் நீ இரட்சிக்கப்படுவாய் என்ற அப் 16:31ன் அடிப்படையில் சொல்வதாக
கூறுகிறார்கள்.
33ம்
வசனத்தை மறந்து விடுகிறார்கள் !!
விசுவாசித்தால்
இரட்சிப்பு உண்டு –
ஆனால் இந்த இரண்டிற்கும் நடுவில் உள்ளதை நாம் நிறைவேற்ற வேண்டும்.
ஒருவருன்
மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தை காணமாட்டான் (யோ 3:3)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக