செவ்வாய், 10 செப்டம்பர், 2019

#447 - R.C. பைபிளில் கர்த்தருடைய நாளை ஞாயிற்றுக்கிழமை என்று ஏன் எழுதப்பட்டது?

#447 - *R.C. பைபிளில் கர்த்தருடைய நாளை ஞாயிற்றுக்கிழமை என்று ஏன் எழுதப்பட்டது?*
 
 9 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.  வெளி 22:19

வாக்குத்தத்தம் இப்படியிருக்க R.C. பைபிளில் கர்த்தருடைய நாளை ஞாயிற்றுக்கிழமை என்று ஏன் எழுதப்பட்டது?

அன்று ஞாயிற்றுக்கிழமை: தேவ ஆவி என்னை ஆட்கொண்டது. எனக்குப் பின்னால் பெருங் குரல் ஒன்று கேட்டது. அது எக்காளம்போல் ஒலித்தது.

10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். வெளி  1:10

*பதில்* :
ஆங்கில மொழி கத்தோலிக்க வேதாகமத்தில் கர்த்தருடைய நாள் என்றே போடப்பட்டிருக்கிறது.

தமிழ் மொழியில் கத்தோலிக்க வேதாகமத்தில் ஞாயிற்றுக்கிழமை என்று வருகிறது உண்மை தான்.

அர்த்தத்தின் படி இவர்கள் இந்த வார்த்தையை போட்டது சரிதான் என்றாலும் வேதத்தை *கூட்டி* கடைபிடிப்பதில் இது ஒரு பொருட்டல்ல.

விக்கிரக வழிபாடு, மரியாள் வழிபாடு, போப்பு முறை, ஃபாதர் என்று அழைப்பது, கர்த்தருடைய பந்தி என்ற பெயரில் புளித்து போன அப்பத்தையும் போதையூட்டப்பட்ட திராட்சை ரசத்தை (வைன்) பருகுவது, வேளாங்கன்னிக்கு காவடி எடுப்பது, பாதயாத்திரை போவது, தேர் இழுப்பது, புடவை கட்டிவிடுவது என்று ஏராளம் ஏராளம் வேதத்திற்கு முரணான காரியங்களை யார் கேட்பது? அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்வதை விட கத்தோலிக்கர் என்றே சொல்வர் !!

கிறிஸ்தவத்தையும் கத்தோலிக்கர்களையும் ஒன்று படுத்தி பார்க்கவே முடியாது. தங்களுக்கென்று அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கைக்கும் கிறிஸ்துவின் கொள்கைக்கும் வெகு தூரம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக