வெள்ளி, 6 செப்டம்பர், 2019

#431 - தேவன் யார்? தேவன் எப்படி பட்டவர்? தேவன் ஒருவரா அல்லது மூவரா?

#431 - *தேவன் யார்? தேவன் எப்படி பட்டவர்? தேவன் ஒருவரா அல்லது மூவரா?*

*பதில்* :
ஆதியாகமம் 1 ல், நாம் உட்பட அனைத்தையும் தேவன் தான் நம்மை படைத்தார் என்பதை அறிகிறோம் / கற்றுக்கொள்கிறோம்.

இருப்பினும், கடவுள் யார் என்பதை நாம் உண்மையில் புரிந்துகொள்கிறோமா? ஒருவேளை நீங்கள் நினைப்பதை விட இது மிகவும் கடினம்.

ஆறு நாட்களில் ஒரு முழு பிரபஞ்சத்தையும் உருவாக்கக்கூடிய ஒருவரை  நாம் உண்மையில் புரிந்து கொள்ள முடியுமா? தேவனைப் பற்றிய எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம், ஆனால் தேவன் தன்னைப் பற்றிய பல விஷயங்களை நமக்கு அளித்த புத்தகத்தில் சொல்லியுள்ளார்.

ஆதியாகமம் 1: 26-ல், "நம்முடைய சாயலில் மனிதனை உருவாக்குவோம்" என்று படித்தோம். பன்மையில் இருப்பதை கவனிக்கவும்.

உண்மையில், கடவுளுக்கான எபிரேய சொல் ஒரு பன்மை பெயர்ச்சொல். ஒரு பன்மை பெயர்ச்சொல் என்பது பல பொருள்களைக் குறிக்கும் ஒற்றை வடிவத்தில் சொல். உதாரணமாக, ஒரு மந்தை என்றால் மிருகங்களின் குழுவைக் குறிக்கிறது, ஒரு மந்தை பறவைகளின் குழுவைக் குறிக்கிறது, அல்லது ஒரு குடும்பம் தொடர்புடைய நபர்களின் குழுவைக் குறிக்கிறது.

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் – ஒருவரா? அல்லது மூவரா?

ஆதி. 1:1 ஆதியிலே *தேவன்* வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

இங்கு தேவன் என்கிற வார்த்தை *ஏலோஹிம்* என்ற எபிரேய வார்த்தையை குறிக்கிறது.  அதாவது பன்மையில் உள்ள வார்த்தை. இந்த வார்த்தையை தான் வேதாகமத்தில் 2601 முறை காணமுடியும்.

ஒருமையில் -- தேவன் என்று அதாவது *ஏலோஆ* என்று 57 முறை மாத்திரமே வேதாகமத்தில் காணமுடியும்.

*ஏலோஆ ஆதார வசனங்கள்
*:  Deu_32:15; Deu_32:17; 2Ch_32:15; Neh_9:17; Job_3:4; Job_3:23; Job_4:9; Job_4:17; Job_5:17; Job_6:4; Job_6:8; Job_6:9; Job_9:13; Job_10:2; Job_11:5; Job_11:6; Job_11:7; Job_12:4; Job_12:6; Job_15:8; Job_16:20; Job_16:21; Job_19:6; Job_19:21; Job_19:26; Job_21:9; Job_21:19; Job_22:12; Job_22:26; Job_24:12; Job_27:3; Job_27:8; Job_27:10; Job_29:2; Job_29:4; Job_31:2; Job_31:6; Job_33:12; Job_33:26; Job_35:10; Job_36:2; Job_37:15; Job_37:22; Job_39:17; Job_40:2; Psa_18:31; Psa_50:22; Psa_114:7; Psa_139:19; Pro_30:5; Isa_44:8; Dan_11:37; Dan_11:38(2); Dan_11:39; Hab_1:11; Hab_3:3

உலக சிருஷ்டிப்பில் உள்ள இரகசியத்தை கவனிக்கவும்:

1-
ஆதி. 1:1 ஆதியிலே *தேவன்* வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஏலோஹிம் – ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் !!   -    எத்தனை பேர்?

2-
ஆதி.  1:2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; *தேவ ஆவியானவர்* ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3-
யோ. 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது,
அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, / அந்த வார்த்தை தேவனாயிருந்தது.


ஆதி. 1:26 பின்பு தேவன்: *நமது* சாயலாகவும் *நமது* ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;  என்கிறார்...

*** ஒருவருக்குள்ளே மூவர் என்றால் – எமது என்றல்லவா வரும் ?

ஒருவர் மேனேஜராக, கணவனாக, அப்பாவாக இருக்கலாம்.. ஆனால் ஒரு மனிதன் தான்.  நாங்கள் என்று தன்னை அவன்  அடையாளபடுத்திக் கொள்வதில்லை!

ஆதி. 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் *நம்மில்* ஒருவரைப்போல் ஆனான்;

ஆதி. 11:7 *நாம்* இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் *தாறுமாறாக்குவோம்* என்றார்.

மூவரும் சேர்ந்து ஒருவராக இருக்கிறார்களா?

தனி தனியாகவே நாம் வேதத்தில் பார்க்கிறோம்.

*திரித்துவம்* என்பது மூவரும் ஒன்றில் இருப்பவர் – அந்த வார்த்தையே வேதத்தில் இல்லை !!

வேதத்தில் இல்லாதது – உலக வார்த்தை !!  மனித தத்துவத்தினால் உண்டான வார்த்தை அது.

திரித்துவம் அல்ல - வேதத்தில் – வேறே பதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது – *தேவத்துவம்*

*வசனங்கள் கீழே*:

ரோ. 1:20  எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை *தேவத்துவம்* என்பவைகள்....

கொலோ. 2:9 ஏனென்றால், *தேவத்துவத்தின்* பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.

*தேவத்துவத்தில் – தனி தனியானவர்களா – ஒரே நபரா* ?


1-
மத். 3:16 *இயேசு* (1)ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; *தேவ ஆவி* (2) புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

Mat. 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் (3) உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்


2-
யோ. 14:16 *நான்* (1) *பிதாவை* (2) வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் *சத்திய ஆவியாகிய* (3) வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

3-
1கொரி. 12:4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
1கொரி. 12:5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
1கொரி. 12:6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

4-
எபே. 4:4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே *ஆவியும்* உண்டு;

எபே. 4:5 ஒரே *கர்த்தரும்*, ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

எபே. 4:6 எல்லாருக்கும் ஒரே *தேவனும் பிதாவும்* உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

5-
2கொரி. 13:14 கர்த்தராகிய *இயேசுகிறிஸ்துவினுடைய* கிருபையும், *தேவனுடைய* அன்பும், *பரிசுத்த ஆவியினுடைய* ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

6-
1பேதுரு 1:2 *பிதாவாகிய* தேவனுடைய முன்னறிவின்படியே, *ஆவியானவரின்* பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் *இயேசுகிறிஸ்துவினுடைய* இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

அப்படியென்றால் *நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்* என்ற யோ. 10:30ல் வரும் வசனத்தின் அர்த்தம் என்ன?

யோ. 10:27-28 …. அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.  அவைகளை *எனக்குத் தந்த என் பிதா* எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை *என் பிதாவின்* கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

யோ. 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

பிதாவும் கிறிஸ்துவும் எண்ணிக்கையில் ஒன்றாக அல்ல – எண்ணங்களில் ஒன்றாயிருக்கிறோம் என்றார்

யோ. 17:22ல்  நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று இயேசு கிறிஸ்து ஜெபம் செய்தார்...

எண்ணிக்கையில் அல்ல – எண்ணத்தில் (in Thinking) என்பது விளங்கும்.

ஏசா. 48:12-17 ஐ வாசித்துப் பார்க்கவும் – மூன்று பேரும் அங்கே குறிப்பிடப்பட்டதை காணமுடியும்.

யோ. 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் *அனுப்பப்பட்டும்* இருக்கிற நான் *என்னை* தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

யோ. 10:37 *என் பிதாவின்* கிரியைகளை *நான்* செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.

John 10:38 செய்தேனேயானால், நீங்கள் *என்னை* விசுவாசியாதிருந்தாலும், *பிதா* என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

*தேவத்துவம் என்கிற பதத்தில்*

பிதாவாகிய தேவன்
குமாரனாகிய தேவன்
பரிசுத்த ஆவியானவராகிய தேவன்  - *தனிதனி நபராக இருக்கிறார்கள்*  

யோ. 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? *என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்* ; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

சிலர் இந்த வசனத்தை காண்பித்து தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். இயேசுவும் பிதாவும் எண்ணிக்கையில் ஒருவராக இருந்தால் – நான் தான் பிதா என்று எப்பவாவது கிறிஸ்து சொன்னதுண்டா?

பிலி. 2:6-7 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதை... என்கிற வசனம் ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்..

*இயேசு – தேவன். ஆனால் பிதாவானவர் அல்ல*


1தீமோ. 3:16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்*, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

ரோ. 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்*. ஆமென்.

கொலோ.  1:15 அவர் அதரிசனமான *தேவனுடைய தற்சுரூபமும்*, சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.

*இவர் தான் அவரென்றால்* - பிதாவினிடத்தில் பரிந்து பேச வேண்டியதில்லையே ?
1தீமோ. 2:5-6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;

1யோ. 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

*மேலும் கவனிக்கவும்*:

இவரே அவராக இருந்தால் – தனக்கு தானே அவர் கேட்டுக்கொள்ள வேண்டுமோ? மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

யோ. 16:23 அந்த நாளிலே நீங்கள் *என்னிடத்தில்* ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் *என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்* கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை;  -

ஆகவே தான் *இயேசப்பா* என்று நாம் இயேசுவை வேத அறிவின்படி அழைக்கமுடிவதில்லை.

இவரே அவர் என்றால் – சிலுவையில் தனக்கு தானே கூப்பிட்டுக்கொண்டாரா?

மத். 27:46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  -   

*உலக முடிவில் நடக்கும் காரியத்தை பார்க்கவும்*:

1கொரி 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, *தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு* ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

இவரே அவர் என்றால் தனக்கு தானே ஒப்புக்கொடுத்துக்கொள்வாரா?

*நம் அடிப்படையான விசுவாசம் தான் என்ன* ?
இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்புவது தானே – அடிப்படை விசுவாசம்??
அப். 8:37

பிசாசு எவ்வளவு தந்திரமாக அடிப்படை விசுவாசத்தையே அநேகருக்கு கேள்விக்குறியாக்கி வைத்திருப்பதை கவனியுங்கள்.

எபி. 1:8-9 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்;

*பிதாவாகிய தேவன் – தேவத்துவத்தின் தலைமையாக இருக்கிறார்* .
உலக சிருஷ்டிப்பை அவர் திட்டம் வகுத்தார்  (எரே.  51:14-15; சங். 33:9).

யோ 14:28 சொல்கிறது பிதாவானவர் கிறிஸ்துவிலும் மேலானவர் என்று.

கிறிஸ்து அல்ல, பரிசுத்த ஆவியானவரும் அல்ல – பிதா ஒருவரே இந்த பூமி எப்போது அழியும் என்று அறிந்தவர் என்று மாற்கு 13:32ல் வாசிக்கிறோம்.

*தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்*
ஆதியிலே உலக தோற்றத்திலேயே இருந்தவர் – ஆதி. 1:2
 உலகம் ஆவியானவார் இயக்கப்பட்டது மற்றும் வடிவமைக்கப்பட்டது. அவர் படைப்பை நிறைவுசெய்து அதை இயக்கினார் (யோபு 26:13; சங்கீதம் 104: 30; ஆதியாகமம் 2: 7).

தேவனுடைய சித்தத்தை மனிதகுலத்திற்கு வழங்குவதில் ஆவியானவர் ஈடுபடுகிறார்.

இயேசு சிலுவையில் (இந்த உலகத்தில்) மரித்தபின் ஆவியானவரை உலகத்திற்கு அனுப்பினார் (யோவான் 16: 7). இயேசு உயிர்த்தெழுந்தபின் பரலோகம் போய் பிதாவானவர் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறாரே !!

வருவதில் ஆவியானவரின் நோக்கம் பல மடங்கு உள்ளது (யோவான் 16: 8-14).

அவர் உலகைக் கடிந்துகொண்டார், அப்போஸ்தலர்களை எல்லா சத்தியத்திலும் வழிநடத்தினார் (எபேசியர் 3: 1-4; 1கொரி. 2: 9-10).

யோ. 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.           

நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை – தேவன் நம்மில் வாசமாயிருக்கிறார் -  Halleluah !!

ஒரே தேவன் (பிதா), ஒரே குமாரன், ஒரே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்கள் (எபேசியர் 4: 4-6).

படைப்பாளரை விவரிப்பது சுலபமல்ல. மிக கடினம். அவரது பரந்த தன்மையும் பெரும் சக்தியும் மனிதனின் எண்ணங்களை மீறுகின்றன.

நாம் அவரை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் இந்த குறுகிய பாடம் நமது தேவன் மற்றும் இரட்சகரைப் பற்றி மேலும் வெளிச்சம் காட்டியிருக்கும் என்று நம்புகிறேன்.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக