வியாழன், 29 ஆகஸ்ட், 2019

#378 *கேள்வி* அன்மையில் ஒரு ஊழியர், கிறிஸ்தவத்தில் அதிகமாக ஜாதி ஆதிக்கம் இருப்பதால் - தான் இஸ்லாமில் சேரப்போவதாக... விளக்கவும்

#378 *கேள்வி* அன்மையில் ஒரு ஊழியர், கிறிஸ்தவத்தில் அதிகமாக ஜாதி ஆதிக்கம் இருப்பதால் - தான் இஸ்லாமில் சேரப்போவதாக சொன்ன போது அதை குறித்த மற்ற ஊழியர்கள் அவரிடம் விசாரிக்க எனக்காக மரித்த இயேசுவை விட்டு தான் போக மாட்டேன் என்று சொன்னார்.

*பதில்* :
நானும் அந்த இரண்டு பதிவையும் கேட்டேன்.

கிறிஸ்தவம் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் மத்தியில்
ஜாதி வித்தியாசம் மாத்திரம் அவர் கண்களில் பட்டது வேதனையான விஷயம்.

பிரிவினைகள், மார்க்க பேதங்கள், வேதத்திற்கு முரணான ஏகப்பட்ட சபை கோட்பாடுகள், சத்தியத்தில் சொல்லப்படாத, கிறிஸ்துவால் & அப்போஸ்தலர்களால் தடுக்கப்பட்டவைகளையும் சபையில் கடைபிடிப்பதை அவர் உணர்ந்தால் – மதத்தை விட்டு வெளியே வந்து கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வந்திருப்பார்.

மேலும், 2வது ஆடியோவில் - தான் இஸ்லாமிற்கு போவதாக *சொன்னதை* அவர் மறுக்கவில்லை!! ஒருவேளை அவர் சொல்லியிருந்தும் எனக்கு வந்த பதிவில் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இஸ்லாமிற்கு போவதாக சொன்ன அந்த வார்த்தையை அவர் உண்மையாக சொல்லியிருக்கும் பட்சத்தில் – கிறிஸ்துவின் பாடுகளுக்கு தன்னை ஒப்பு்ககொடுக்காமல் தன் சுய விருப்பத்திற்கு சாய்ந்து கிறிஸ்துவை மறுதலித்திருக்க வாய்ப்பு இருக்கிறதே (2தீமோ. 2:12, 13, தீத்து 1:16, 1யோ. 2:23, 22)

ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக. பிலி. 3:16

நெருக்கமான சூழ்நிலையை உருவாக்கி தவறு செய்ய வைப்பது பிசாசின் தந்திரம். தேவனுடைய வார்த்தையை அறிந்து உணரும் போது தன் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்பி தேவனிடத்தில் ஒப்புரவாகும் போது சகல பாவத்தையும் அவர் மன்னிக்கிறவர் (1யோ. 1:1-2)

அனுதினமும் படும் பிரயாசங்களும் வேதனைகளையும் தேவன் தன் கணக்கில் வைத்திருக்கிறார் (எபி. 6:10) – நமக்கான ஜீவ கிரீடத்தை பெற (2தீமோ. 4:8) முடிவு பரியந்தம் நிலைநிற்க வேண்டும் (மாற்கு 13:13).  

ஓட்டப்பந்தயத்தில் முன்னதாக ஓடினாலும் பாதியில் வெளியேறுபவர்கள் – வெற்றியாளர்கள் என்று கருதப்படுவதில்லையே !!

நீதிமானாக வளர்ந்து வரும் போது நேர்ந்த சோதனைகளிலிருந்து – தவறுகளில் இருந்து உதறி தட்டி உணர்ந்து சத்தியத்திற்கு திரும்பி தேவனிடத்திலும் சம்பந்தப்பட்ட மனிதர்களிடத்திலும் தன் பாவத்தை அறிக்கையிட்டு எழுந்து தேவனுக்கென்று பிரகாசிக்கட்டும் (நீதி. 24:16, யாக். 5:16)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக