#372 - *நியாயத்தீர்ப்புக்கு பின் பூமி அழிக்கப்படுமா? அல்லது நியாயதீர்ப்புக்கு முன் பூமி அழிக்கபடுமா?*
*பதில்* :
*இரண்டாம் வருகையில் நடக்கும் சம்பவங்கள்*:
1- எக்காளம் தொனிக்கும்.
2- ஏற்கனவே மரித்தவர்கள் அழிவில்லாத சரீரம் கொடுக்கப்பட்டு எழுந்திருப்பார்கள்.
3- உயிரோடிருப்பவர்கள் அழிவில்லாத சரீரத்தோடு மறுரூபமாவோம்.
4- பூமியனைத்தும் அழியும்.
5- அனைவரும் கிறிஸ்துவுக்கு முன்பதாக நிற்போம்.
6- நியாயதீர்ப்பு கொடுக்கப்படும்
*ஆதார வசனங்கள் கீழே*:
தானி. 12:2-3 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய
அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும்
இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள
சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
1கொரி. 15:23-25 அவனவன் தன்தன் வரிசையிலே
உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது
அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும்,
அவர் ஆளுகை செய்யவேண்டியது.
மத். 25:46 அந்தப்படி, இவர்கள்
நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும்
போவார்கள் என்றார்.
யோ. 5:28-29 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்;
ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம்
வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை
அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை
அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
1கொரி. 15:51-52 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும்
நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது,
ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும்,
அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;
நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
1தெச. 4:15-17 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு
நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும்
உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து
இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது
எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,
மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,
இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
2பேதுரு 3:10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன்
வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும்,
பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள
கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
வெளி.
20:11-15
பின்பு, நான் பெரிய
வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. மரித்தோராகிய சிறியோரையும்
பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது
புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும்
திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே
மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை
ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக்
காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக