சனி, 24 ஆகஸ்ட், 2019

#362 *கேள்வி* மாற்கு 6 : 47 to 52 வசனங்களில் நடக்கிற சம்பவத்தில் ஆண்டவர் அவர்களை சோதிக்கிறாரா?


#362
*கேள்வி*
மாற்கு 6 : 47 to 52 வசனங்களில் நடக்கிற சம்பவத்தில் ஆண்டவர் அவர்களை சோதிக்கிறாரா?

அல்லது பிசாசு அவர்களை சோதிக்கிறானா?

ஆண்டவர் சோதிக்கிறார் என்றால் யாக்கோபு 1 : 13,14 வசனங்களில் படி அவர் பொல்லாங்கினால் சோதிப்பவர் அல்லவே இச்சம்பவத்தின் அடிப்படை என்ன?

சபைகளில் ஆண்டவர் தான் இதில் சோதிக்கிறார் என்று சொல்வது சரியா?

*பதில்* :
சோதனை என்ற வார்த்தைக்கு வளக்கமாக தமிழில் கிறிஸ்தவர்களாகிய நாம் பிரச்சனை என்றே அதிகமாக பொருள் கொள்கிறோம்.

சோதனை – என்பதற்கு Inspection / Testing பரிசோதித்து பார்பதற்கும் சோதனை என்றே பொருள்.

பள்ளி பாடத்திற்கு வைக்கும் பரீட்சையை இலங்கை தமிழர்கள் – சோதனை என்று தான் சொல்வார்கள்.

நாம் இன்று பரீட்சை இருக்கிறது என்போம் – அவர்கள் இன்று சோதனை இருக்கிறது என்பார்கள் !!

நம் விசுவாசத்தை பரீட்சித்து பார்ப்பது – சோதனை. அவ்வாறான சோதனை தான் இந்த மாற்கு 7:47-52ல் பார்க்கிறோம்.

தவறான / வேதத்திற்கு புறம்பான காரியங்களில் நாமாக ஈடுபட்டு அதன் பொருட்டு பிரச்சனைகளில் அகப்படுவது – பிசாசினால் (தேவ வார்த்தையை நாம் மீறி நடந்தது பிசாசின் தூண்டுதலல்லவா) நமக்கு பிரச்சனைகளை கொடுக்கிறான் – அதிலிருந்து விடுபட நாம் நம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்கிறார் யாக்கோபு 1:13-14.

*Eddy Joel*, PhD
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

*வேதாகம கேள்வி பதில் மாத்திரமே பகிரப்படும் Whatsapp (Locked) குழுவில் இணைய அழைக்கிறோம்.


** அணைத்து கேள்வி பதில்களையும் காண :  https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions


*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக