சனி, 24 ஆகஸ்ட், 2019

#361 - பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியானவர் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் விளக்கம் தரவும்?

#361 - *பரிசுத்த ஆவி & பரிசுத்த ஆவியானவர் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் விளக்கம் தரவும்?*

*பதில்* :

*தேவத்துவம்*
பரிசுத்த ஆவியானவர் பிதாவுடனும் குமாரனுடனும் குறிப்பிடப்படுகிறார்.

மத். 3: 16-17 – யோர்தான் நதியில் இயேசு, ஆவியானவர் இறங்குகிறார், பிதா பரலோகத்தில் இருக்கிறார்.

மத். 28: 18-20 - ஞானஸ்நானம் மூவரின் பெயரிலும் கொடுக்கப்படுகிறது.

யோவான் 15:26 - இயேசு பிதாவிடமிருந்து ஆவியானவரை அனுப்பினார்.

ரோ. 15:31 – பரிசுத்த ஆவியானவர் நிமித்தமும் கிறிஸ்துவின் நிமித்தமும் தேவனிடம் ஜெபம் செய்கிறோம்.

II கொ. 13:14 - இயேசுவின் கிருபை, தேவனின் அன்பு, ஆவியின் ஐக்கியம்.

1 யோவான் 5: 7 – மூவரும்  ஒன்று

*பரிசுத்த ஆவியானவர் தேவன். அவருக்கான பண்புகளை கீழே காணவும்*:
1. சர்வவல்லவர் (Omnipresent) - சங். 139: 7

2. சர்வத்தையும் அறிந்தவர் (Omniscience) - 1கொரி. 2: 10-11

3. சர்வ வல்லமையுள்ளவர் (Omnipotent) - லூக்கா 1:35, மீகா 3: 8

4. நித்தியமானவர் (Eternal)- எபி. 9:14

5. ஜீவனைக் கொடுப்பவர் (Life Giver) - யோவான் 3: 3-6, ரோமர். 8:11

6. சத்தியமானவர் (Truth) - 1 யோவான் 5: 7

7. நீதிபரர்  (Justifier) – 1கொரி. 6:11

பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லுவது தேவனிடத்தில் பொய் சொல்லுவது என்றார் பேதுரு அப்போஸ்தலர் 5: 3-4

பிசாசுகள் தேவ ஆவியால் துரத்தப்படுகின்றன - மத். 12:28, லூக்கா 11:20

*பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்*
1. இந்த உலகத்தை உருவாக்கியதில் அவர் ஒருவர் - ஆதி. 1: 1-2

2.
அவர் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் கற்பித்தார், நினைவுபடுத்தினார் – 1 பேதுரு 1: 10-12, யோவான் 14:26

3.
அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் மூலம் அவர் சாட்சி கொடுத்தார் - யோவான் 15:26, எபி. 2: 3-4

4.
அவர் அப்போஸ்தலர்களுக்கு வழிகாட்டினார் - யோவான் 16:13

5.
அப்போஸ்தலர்கள் மூலம் அவர் நம்மிடம் பேசுகிறார் – 1 தீமோ. 4: 1

6. அவருடைய போதனைகளை நாம் பின்பற்றும்போது அவர் கிறிஸ்தவர்களை வழிநடத்துகிறார் - ரோமர் 8: 12-14

*என்ன வித்தியாசம்*?
கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களில் ஆவியானவர் நேரிடையாக ஆலோசனைகளை வழங்கினார் (அப். 21:11)

இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்ற கட்டளையின் அடிப்படையில் அப்போஸ்தலர்களுக்கு அவர் கொடுக்கப்பட்டார் (அப். 1:5) அது அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட *கட்டளை*

அவர்கள் எருசலேமை விட்டு வெளியேறாமல் இந்த வாக்குதத்தம் நிறைவேற காத்திருந்து பெற்றுக்கொண்டார்கள் (அப். 1:5). 50ம் நாள் பண்டிகையில் நிறைவேறியது. இன்னும் இந்த சம்பவம் நாம் வேண்டும் போதெல்லாம் தொடரும் என்று குழம்பி கொள்ள வேண்டாம்.

இயேசு கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்ட அப்போஸ்தலர்கள், தாங்கள் யார் தலைமீது கைகளை வைத்து அதற்காக ஜெபித்தார்களோ அவர்களும் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்டார்கள். (அப். 8:15-17)

ஆனால், அப்போஸ்தலரின் கையால் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொண்ட எவரும் மற்றவருக்கு கொடுக்க முடியவில்லை (அப். 8:18, 15)

வசனத்தை கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, பாவத்தையல்ல விசுவாசத்தை அறிக்கையிட்டு, பாவமன்னிப்புக்கென்று யார் ஒருவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு பரிசுத்த ஆவி வரமாக (பரிசாக) கொடுக்கப்படுகிறது (அப். 2:38)

(தெளிப்பா முழுக்கா என்ற கேள்விக்கு இடமேயில்லை – முழுக்கு மாத்திரமே. இதன் விளக்கத்தை #196ல் காணலாம்)

*நாம் பெற்றுக்கொள்வது* – பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தம் / தன்மை / சுபாவம்.

அதன் நிமித்தம் வசனத்திற்கு கீழ்படிதலை கற்றுக்கொண்டு வசனத்தில் பெலனடைகிறோம் (1பேதுரு 1:2, லூக்கா 4:1)

எழுதப்பட்டிருக்கும் வார்த்தை – ஆவியானவரின் பட்டயம் என்கிறது வேதம் (எபே. 6:17)

மிக மிக வலிமை வாய்ந்தது – எபி. 4:12

அவருடைய வார்த்தையை படிக்கும்போது – நம் பாவங்களை உணர்த்துகிறார் (யோ. 15:8)

ஒருவர் திருத்தப்படுதல் – வார்த்தையினால் ஆகிறது – தீத்து 1:9

வசனத்தை கேட்டபொழுது குத்தப்படுகிறார்கள் (அப். 2:37)

ஆவியானவர் நம்மை முன்நடத்துகிறார் – ரோ. 8:14, சங். 119:105

*எப்படி இடைபடுகிறார் / நடத்துகிறார்*?
கொலோ. 3:16 - கிறிஸ்துவின் வசனம் உங்களிடத்தில் தங்கியிருந்து செயல்படுகிறது . .

ரோ. 10:17 - சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலம் நம்பிக்கை வருகிறது

1கொரி 4:15 - சுவிசேஷத்தின் மூலம் பிறபிக்கப்படுகிறோம்.

1பேது 1:23 - கடவுளின் வார்த்தையால் பிறபிக்கப்படுகிறோம்.

யோ 6:63 - இயேசு பேசிய வசனங்கள் நமக்கு ஆவியும் ஜீவனாயும் இருக்கிறது.

உங்கள் கேள்விக்கான பதிலை இந்த தலைப்பில் ஓரளவிற்கு புரியும்படி எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக