#360 - *கர்த்தருடைய பந்தியை விசுவாசிகளின் வீடுகளுக்கு அல்லது
வியாதிப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருப்பவர்களுக்கு
கொண்டுபோய் கொடுப்பது சரியா? தவறா? விளக்கம்
தேவை சகோதரா*
*பதில்* :
வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்கும்படி சீஷர்கள் *கூடி*
வந்தார்கள் (அப். 20:7)
சபை *கூடி* வந்ததன் நோக்கம் – அன்பிற்கும் நற்கிரியைகளுக்கும்
ஏவப்படவேண்டும். (எபி. 10:24-25)
*கூடி* வந்த போது காணிக்கை செலுத்தினார்கள் (1கொரி. 16:1-2)
இப்படி ஆராதனை / தொழுகை என்பது (1) செய்தியை கேட்பது, (2) ஜெபிப்பது, (3) துதித்து பாடுவது, (4) பந்தியில் கலந்து கொள்வது, (5) காணிக்கை செலுத்துவது
என்ற 5 பகுதியையும் உள்ளடக்கி இருக்கும் போது - *கூடி வர முடியாத* நிர்பந்தமான
சூழ்நிலையில் – பந்தியை தவிர மற்ற அனைத்தும் விடுபடுகிறதே? ஆகவே
கர்த்தருடைய பந்திக்கு *மாத்திரம்* முக்கியத்துப்படுத்துவது உகந்ததல்ல.
முற்றிலும் தவிர்க்கமுடியாத சில வேளைகளில் அப்படி எங்கள்
கூட்டத்திலும் நடந்திருக்கிறது. அப்போது அந்த *நாளின் செய்தியையும்* சுருக்கமாக
பகிர்ந்து கொண்டு கர்த்தருடைய பந்தியை அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக