#347 - *சபையில் காணிக்கையாக நகை பணம் கொடுங்கள் என்று
கட்டளை பிறப்பது போன்று கேட்கலாமா?*
*பதில்* :
காணிக்கை என்பது – ஆராதனையின் ஒரு பங்கு.
பரிசுத்தவான்களின் குறைச்சலுக்காக செலவிடப்பட்டபோது தேவனுக்கு
அது மகிமையாக இருந்தது (2கொரி. 9:10-15)
காணிக்கையை திட்டமிட்டு கொடுக்க வேண்டும் (1கொரி. 16:1-2)
காணிக்கையை மனமுவந்து கொடுக்க வேண்டும் – கேட்டு பெற்றுக் கொள்வது
காணிக்கை அல்ல !!
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன்
மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க்
கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். (2கொரி. 9:7)
ஊழியர்கள், தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து,
கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும். அவலட்சணமான
ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை
இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும்,
கண்காணிப்பு செய்ய வேண்டும். (1பேதுரு 5:2-3)
சபை தேவைக்கேற்ப – ஆதி கிறிஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களையும்
மனமுவந்து கொடுத்த சம்பவங்கள் உண்டு (அப். 2:45, அப். 4:34-37,
அப். 5:1-2)
நகையை காணிக்கை பெட்டியில் போட பிரியமுள்ளவர்கள் – அதை
பணமாக்கி அந்த பணத்தை காணிக்கையாக போடும் போது தவறான வழியில் போகாமல் அதன் பயன் நேர்த்தியானதாக
செலவிட பிரயோஜனமாக இருக்கும் என்பது என் கருத்து.
கட்டாய காணிக்கை என்பது – புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ சட்டத்திற்கு
விரோதமானது. (2கொரி. 9:7)
மனமுவந்து – சபையின் தேவைகளை அறிந்து – சபையார் ஒருவரை
ஒருவர் தாங்க வேண்டும். தேவன் அதில் பிரியப்படுகிறார்.
நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும்
அளக்கப்படும். (மாற்கு 4:24)
சிறுக விதைக்கிறவன் சிறுக அறுக்கிறான் (2கொரி. 9:6)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக