#330
*கேள்வி*
பெண்கள் ஞானஸ்நானம் எடுக்கலாமா?
பெண்கள் கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்ளலாமா?
*பதில்* :
உண்மையாகவே இந்த கேள்வியை கண்டதும் கொஞ்சம் யோசித்தேன்.
எந்த அடிப்படையில் இந்த கேள்வி எழும்பினது என்பது இன்னமும்
ஒரு புதிர் தான். ஒருவேளை சில பிரிவினர் இப்படி கடைபிடிக்கிறார்களோ அதை கேட்டு நம்
சகோதரர் இந்த வினாவை எழுப்பியிருக்கலாம்.
கிறிஸ்துவின் இராஜ்ஜியத்தில் இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு
எந்த பாகுபாடும் இல்லாமல் ஆணும் பெண்ணும் சமமாக இருக்கிறார்கள்.
கலா 3:27-28 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம்
பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத்
தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும்
சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
இரட்சிப்பு என்பது பூமியிலுள்ள அனைவருக்கும் பொதுவானது (மத்
28:19)
கிறிஸ்துவின் சிலுவை மரணம் அனைவருக்காகவும் செலுத்தப்பட்ட
பாவநிவாரண பலி. அதில் ஆண் / பெண் என்ற எந்த பாகுபாடும் இல்லை. (2கொரி 5:15, ரோ 10:12-15)
அவருடைய மரணத்தை நினைவுகூறும் கடமை கிறிஸ்தவர்களாகிய
அனைவருக்கும் பொருந்தும்.
ஊழியத்தில் உதவியாய் இருந்த அநேக சகோதரிகளை புதிய
ஏற்பாட்டில் காண்கிறோம். ரோ 16:15, 16:1, 2 யோ 1:13)
ஆண்கள் முன்னிலையில் பிரசங்கம் / அதிகாரம் செய்வதற்கு
பெண்களுக்கு அதிகாரமில்லை.
*Eddy Joel*
Preacher –
The Churches of Christ
Teacher –
World Bible School
+968
93215440 / joelsilsbee@gmail.com
-நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கில்
சொடுக்கவும்:
Group 2:
Group 1:
** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது
வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக