திங்கள், 12 ஆகஸ்ட், 2019

#331 *கேள்வி* ரோமர் 8: 21 படைப்புகள் எல்லாம் படைத்தவரால் மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கின்றன என்று பவுல் ஏன் சொல்லவேண்டும்?


#331

*கேள்வி*

ரோமர் 8: 21 - அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

படைப்புகள் எல்லாம் படைத்தவரால் மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கின்றன என்று பவுல் ஏன் சொல்லவேண்டும்? இதற்கு காரணம் என்ன?

*பதில்* :
ஆதாம் ஏவாளின் மீறுதலினால் அவர்கள் வித்தாகிய எல்லார் மீதும் பாவம் வந்தது. (1கொரி 15:22)

கிறிஸ்தவர்கள் வாழும் காலத்தில், இந்த பாவ உலகத்தின் நிமித்தம் / சத்தியத்தை பற்றிகொண்டதன் நிமித்தம் தற்காலத்தின் பாடுகளை களைந்து நித்திய மகிழ்ச்சியில் பிரவேசிக்க சிருஷ்டியானது (கிறிஸ்தவர்களாகிய நாம்) கிறிஸ்துவின் வருகைக்கு காத்து கொண்டிருக்கிறோம் (ரோ 8:17-19)

அடிமை படுத்திய நியாயபிரமாணத்திலிருந்து சுயாதீனனாக விடுதலை பெற்ற எந்த மனுஷனும் முழுமையடைவது கிறிஸ்துவின் வருகையில் (ரோ 8:20)

சுய இஷ்டத்தினாலே அல்ல பிசாசினால் வஞ்சிக்கப்பட்டதாலே / பாவம் செய்ததாலே தேவனால் தண்டிக்கப்பட்டோம் (ஆதி 3:17)

மாயை என்பது அழிவை குறிக்கிறது.

பாவம் செய்ததின் விளைவால் பாவம் செய்தவர்கள் அழிவிற்கு கீழ்பட்டிருக்கிறார்கள்.

ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். ரோ 8:22-23

இந்த பாடுகளிலிருந்து சகல சிருஷ்டியும் கிறிஸ்துவின் வருகையில் பலனடைகிறது.


*Eddy Joel*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com 

-நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்:

Group 2:

Group 1:

** இது வரை கேட்கப்பட்ட அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக