திங்கள், 12 ஆகஸ்ட், 2019

#328 - யாருக்கு இரத்தசாட்சி மரணம்?

#328 - *யாருக்கு இரத்தசாட்சி மரணம்?*

*பதில்* :
"ஒருவரது மத (மார்க்கம்) அல்லது பிற நம்பிக்கைகளால் கொல்லப்பட்ட நபரை" மார்ட்டைர் என்ற கிரேக்க வார்த்தையின் தமிழ் அர்த்தம் தியாகி என்றோ சாட்சி மரணம் என்றோ அகராதி வரையறுக்கிறது.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் துன்புறுத்தப்பட்டனர் மற்றும் / அவர்களின் நம்பிக்கைகாக / சாட்சிக்காக கொல்லப்பட்டனர்.

இதற்கு சான்றாக, அப்போஸ்தலர் 6: 8–7: 53-ல் பதிவு செய்யப்பட்ட முதல் கிறிஸ்தவ தியாகியான ஸ்தேவானின் சம்பவம்.

ஸ்தேவானின் ஊழியம் பரிசுத்த ஆவியானவர் உதவியால் பெரிதும் கிரியை செய்ததன் விளைவு, அந்தகாரத்தில் இருப்பவர்களின் வெறுப்பை சம்பாதித்தது.

ஸ்தேவான் மிக தைரியமாக “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.  தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.”(அப்போஸ்தலர் 7: 51-53).

சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த மனிதர்கள் ஸ்தேவான் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து கல்லெறிந்து கொலை செய்தனர் (அப்போஸ்தலர் 6: 11-14, 7ம் அதிகாரம்).

மேலும் வேதாகமத்தில் – பார்க்கும் ஒர் உதாரணம் துன்புறுத்தப்படும் இடங்களில் இருந்து நாம் விலகியிருக்க போதிக்கபட்டிருக்கிறோம். ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; (மத். 10:23)

கிறிஸ்துவுக்காக மரிக்க வேண்டும் என்று நாமே ஒரு வழக்கை உருவாக்க கூடாது.

ஒருவேளை தவிர்க்க முடியாத / தப்பி போக முடியாத சூழ்நிலையில் விசுவாசத்திற்காக / கிறிஸ்துவிற்காக மரிக்க நேர்ந்தால் அது ஒரு மிக பெரிய பாக்கியம். சுவிசேஷம் அறிவிக்க கூடாது என்று அரசாங்கத்தால் ஆணையிடப்பட்டு தடைசெய்யப்பட்டும் - அறிந்தே அரபியர்களிடமும் மசூதிகளின் உள்ளே போய் வலுக்கட்டாயமாக சத்தியத்தை சொல்லுகிறேன் என்பவர்கள் கிறிஸ்துவின் கட்டளையை மீறி சுய விளம்பரம் தேடுபவர்கள் (எபே. 6:6, கலா. 1:10, 1பேதுரு 2:18-19, 1தீமோ. 6:1, 1பேதுரு 3:16)

ஆதிகால சீஷர்கள் துன்புறுத்தல்களிலிருந்து விலகி போனதை படிக்கிறோம். (அப். 8: 1; 9:25, 30; 14: 6; 17:10, 14).

வேதாகம எடுத்துக்காட்டுகளில் ஒவ்வொன்றிலும், ஆரம்பகால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலிலிருந்து விலகி, பிழைப்புக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டதை அறிகிறோம்.

“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.”(மத் 10:39) என்றார் இயேசு கிறிஸ்து.

மக்கள் தங்கள் உயிரை இழக்க முயற்சி செய்யும்படி அவர் அழைக்கவில்லை.

மாறாக, அவர் நிமித்தம் நம் உயிரையும் இழக்க ஆயத்தமாக இருக்கும்படி நம்மை அழைக்கிறார்.

கிறிஸ்துவிற்காக மரிக்க வேண்டும் என்ற பாதையை தீவிரமாக நாடுபவர்கள் அதை தேவ மகிமைக்காக அல்ல, மாறாக தங்கள் சொந்த மகிமைக்காகவே தேடுகிறார்கள்.

நாம் வாழும் உலகம் பாவம் நிறைந்தது. நீதியாய் வாழ்பவர்களை நிச்சயம் எதிர்க்கும்.

சத்தியத்தை திட்டமாய் போதிக்கிறவர்களை இந்த வியாபார கிறிஸ்தவ உலகம் அங்கீகரிக்காது. பெயரும் புகழும் அவர்களுக்கு அவசியமாய் இருக்கிறது. (Rev) ரெவரென்ட் என்றும் அப்போஸ்தலர் என்றும் தீர்க்கதரிசி என்றும் ஃபாதர் (Father) என்றும் தங்களை அடையாளபடுத்திக்கொள்ள விளம்பரம் செய்பவர்கள் மத்தியில் – எல்லோரும் சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும் என்று வேதம் சொல்வதை எடுத்து சொன்னால் கல்லெறியத்தானே செய்வார்கள். சத்தியத்தை அறியாத சுய ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் கிறிஸ்தவ வியாபாரிகள் என்பது கஷ்டமான நிதர்சனமான வார்த்தையல்லவா?

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். (2தீமோ. 3:12)

பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,  கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். (1பேதுரு 4:12-16)

மனசாட்சி / பொய்சாட்சி / துர்மனசாட்சி / சாட்சி / நற்சாட்சி போன்ற வார்த்தைகள் தான் தமிழ் வேதத்தில் இதுவரை நான் கண்டது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக