ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

#327 - பிதா, குமாரன், பரிசுத்த ஆவி குறித்து விளக்கம் தாருங்கள்

#327 - *பிதா, குமாரன், பரிசுத்த ஆவி குறித்து விளக்கம் தாருங்கள்*

*பதில்* :
அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது !!

தங்களது புரிதலுக்கு ஆதரவாக இந்த பதிவு இருந்தால் மெச்சிக்கொள்வதும்
வேறு வகையாக மாறி இருந்தால் வேத வசனத்துடன் சரிபார்த்தும் சரியானதாக இருந்தாலும் தங்களது தடித்த கொள்கைகளை விட மறுப்பதுமாக இக்கால இருதயங்கள்  இருப்பது வேதனைக்குறியது.

அதிமுக்கியமான இந்த பதிவு கொஞ்சம் நீளமாக இருப்பதால் - அறிந்த வரிகளை விட்டு நம் கண்கள் தாவி மறு வரிக்கு போகாமல் – *அனைத்து வரிகளையும் கவனமாக படிக்கவும்*. குறிப்பாக வேதாகமத்தை கையில் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட வசனங்களை நீங்கள் உங்கள் வேதாகத்தை திறந்து படித்து ஒப்பிட்டு பார்க்கவும்.

தேவ வசனங்களை நாம் ஆராய்ந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.


இந்த தலைப்பை குறித்து ஏற்கனவே அறிந்த / புரிந்து வைத்திருக்கும் கருத்துக்களை சிறிது தள்ளி வைத்து விட்டு *முழுமையாக* படித்து முடித்தபின் – உங்கள் இருதயத்தின் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டு வசனத்தை ஒப்பிட்டு பார்க்கவும்.

மனித சிந்தனைகள், தத்துவங்கள், உலக கதைகள், - நம்மை பாதை மாற்றி விடும்.   கொலோ. 2:8

தேவனுக்குரியவைகளை நாம் தேவனிடத்திலிருந்து மாத்திரமே அறிய முடியும்.

இவ்வளவு மகத்துவமான தேவன் தன் நிலைமையை குறித்து இவ்வளவு குழப்பமாகவா வைத்திருப்பார்? நிச்சயமாக இல்லை.  தேவனை குறித்து மனிதன் சரியாக புரிந்து கொள்ள கூடாதென்று பிசாசானவன் மிக தெளிவாக குழப்பிவிடுவானேயன்றி வேறொன்றும் அல்ல.  !!

பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் – ஒருவரா? அல்லது வேறு வேறு நபரா?

அநேக கருத்துக்கள் உண்டு –
பரலோகத்தின் காரியங்களை நாம் யூகிக்காமல் - வேதாகமத்திலிருந்து மாத்திரமே உண்மையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

ஏசா. 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.

1- சிலர் – முட்டையை அடையாளபடுத்தி
வெளி ஓடு, வெள்ளை படலம் மற்றும் மஞ்சள் கரு – 3 உள்ளது ஆனால் ஒரு முட்டை என்று சொல்வது போல் என்கின்றனர்.

2- இன்னும் சிலர்  மனிதன் எப்படி ஆவி ஆத்துமா சரீரம் என்று மூன்றாக இருக்கிறானோ அப்படி என்கின்றனர்.

அப்படி யென்றால் – நாம் / நாங்கள் என்று நம்மை சொல்லிக்கொள்வதில்லையே? மாறாக நான் என்று தானே நம்மை குறித்து ஒருமையில் சொல்கிறோம்..

*கீழே வசனத்தை கவனிக்கவும்*:
ஆதி. 1:1 ஆதியிலே *தேவன்* வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

இங்கு தேவன் என்கிற வார்த்தை *ஏலோஹிம்* என்ற எபிரேய வார்த்தையை குறிக்கிறது.  அதாவது பன்மையில் உள்ள வார்த்தை. இந்த வார்த்தையை தான் வேதாகமத்தில் 2601 முறை காணமுடியும்.

ஒருமையில் -- தேவன் என்று அதாவது *ஏலோஆ* என்று 57 முறை மாத்திரமே வேதாகமத்தில் காணமுடியும்.

*ஏலோஆ ஆதார வசனங்கள்*:  Deu_32:15; Deu_32:17; 2Ch_32:15; Neh_9:17; Job_3:4; Job_3:23; Job_4:9; Job_4:17; Job_5:17; Job_6:4; Job_6:8; Job_6:9; Job_9:13; Job_10:2; Job_11:5; Job_11:6; Job_11:7; Job_12:4; Job_12:6; Job_15:8; Job_16:20; Job_16:21; Job_19:6; Job_19:21; Job_19:26; Job_21:9; Job_21:19; Job_22:12; Job_22:26; Job_24:12; Job_27:3; Job_27:8; Job_27:10; Job_29:2; Job_29:4; Job_31:2; Job_31:6; Job_33:12; Job_33:26; Job_35:10; Job_36:2; Job_37:15; Job_37:22; Job_39:17; Job_40:2; Psa_18:31; Psa_50:22; Psa_114:7; Psa_139:19; Pro_30:5; Isa_44:8; Dan_11:37; Dan_11:38(2); Dan_11:39; Hab_1:11; Hab_3:3


*உலக சிருஷ்டிப்பில் உள்ள இரகசியத்தை கவனிக்கவும்*:

1-
ஆதி. 1:1 ஆதியிலே *தேவன்* வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஏலோஹிம் – ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் !!   -    எத்தனை பேர்?

2-
ஆதி.  1:2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; *தேவ ஆவியானவர்* ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3-
யோ. 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது,
அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, / அந்த வார்த்தை தேவனாயிருந்தது.


ஆதி. 1:26 பின்பு தேவன்: *நமது* சாயலாகவும் *நமது* ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;  என்கிறார்...

*** ஒருவருக்குள்ளே மூவர் என்றால் – எமது என்றல்லவா வரும் ?

ஒருவர் மேனேஜராக, கணவனாக, அப்பாவாக இருக்கலாம்.. ஆனால் ஒரு மனிதன் தான்.  நாங்கள் என்று தன்னை அவன்  அடையாளபடுத்திக் கொள்வதில்லை!

ஆதி. 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் *நம்மில்* ஒருவரைப்போல் ஆனான்;

ஆதி. 11:7 *நாம்* இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் *தாறுமாறாக்குவோம்* என்றார்.

மூவரும் சேர்ந்து ஒருவராக இருக்கிறார்களா?

தனி தனியாகவே நாம் வேதத்தில் பார்க்கிறோம்.

*திரித்துவம்* என்பது மூவரும் ஒன்றில் இருப்பவர் – அந்த வார்த்தையே வேதத்தில் இல்லை !!

வேதத்தில் இல்லாதது – உலக வார்த்தை !!  மனித தத்துவத்தினால் உண்டான வார்த்தை அது.

திரித்துவம் அல்ல - வேதத்தில் – வேறே பதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது – *தேவத்துவம்*

வசனங்கள் கீழே:
ரோ. 1:20  எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை *தேவத்துவம்* என்பவைகள்....

கொலோ. 2:9 ஏனென்றால், *தேவத்துவத்தின்* பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.


*தேவத்துவத்தில் – தனி தனியானவர்களா – ஒரே நபரா* ?

1-
மத். 3:16 *இயேசு* (1)ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; *தேவ ஆவி* (2) புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

Mat. 3:17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் (3) உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

2-
யோ. 14:16 *நான்* (1) *பிதாவை* (2) வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் *சத்திய ஆவியாகிய* (3) வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்


3-
1கொரி. 12:4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
1கொரி. 12:5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
1கொரி. 12:6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்


4-
எபே. 4:4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே *ஆவியும்* உண்டு;

எபே. 4:5 ஒரே *கர்த்தரும்*, ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,

எபே. 4:6 எல்லாருக்கும் ஒரே *தேவனும் பிதாவும்* உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்


5-
2கொரி. 13:14 கர்த்தராகிய *இயேசுகிறிஸ்துவினுடைய* கிருபையும், *தேவனுடைய* அன்பும், *பரிசுத்த ஆவியினுடைய* ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்


6-
1பேதுரு 1:2 *பிதாவாகிய* தேவனுடைய முன்னறிவின்படியே, *ஆவியானவரின்* பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் *இயேசுகிறிஸ்துவினுடைய* இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.

ஒருவரையா ஒன்றுக்கு மேற்பட்டவரையா? / கவனியுங்கள்

அப்படியென்றால் *நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்* என்ற யோ 10:30ல் வரும் வசனத்தின் அர்த்தம் என்ன?

யோ. 10:27-28 …. அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை.  அவைகளை *எனக்குத் தந்த என் பிதா* எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை *என் பிதாவின்* கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

யோ. 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

பிதாவும் கிறிஸ்துவும் எண்ணிக்கையில் ஒன்றாக அல்ல – எண்ணங்களில் ஒன்றாயிருக்கிறோம் என்றார்

யோ. 17:22ல்  நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று இயேசு கிறிஸ்து ஜெபம் செய்தார்...

எண்ணிக்கையில் அல்ல – எண்ணத்தில் (in Thinking) என்பது விளங்கும்.

ஏசா. 48:12-17 ஐ வாசித்துப் பார்க்கவும் – மூன்று பேரும் அங்கே குறிப்பிடப்பட்டதை காணமுடியும்.

யோ. 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் *அனுப்பப்பட்டும்* இருக்கிற நான் *என்னை* தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

யோ. 10:37 *என் பிதாவின்* கிரியைகளை *நான்* செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.

John 10:38 செய்தேனேயானால், நீங்கள் *என்னை* விசுவாசியாதிருந்தாலும், *பிதா* என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

*தேவத்துவம் என்கிற பதத்தில்*
பிதாவாகிய தேவன்
குமாரனாகிய தேவன்
பரிசுத்த ஆவியானவராகிய தேவன்  *தனிதனி நபராக இருக்கிறார்கள்*  

யோ 14:9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? *என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்* ; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?

சிலர் இந்த வசனத்தை காண்பித்து தங்கள் கருத்தை முன்வைக்கிறார்கள். இயேசுவும் பிதாவும் எண்ணிக்கையில் ஒருவராக இருந்தால் நான் தான் பிதா என்று எப்பவாவது கிறிஸ்து சொன்னதுண்டா?

பிலி. 2:6-7 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதை... என்கிற வசனம் ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்..

*இயேசு – தேவன். ஆனால் பிதாவானவர் அல்ல*
1தீமோ. 3:16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. *தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்*, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

ரோ. 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, *இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்*. ஆமென்.

கொலோ.  1:15 அவர் அதரிசனமான *தேவனுடைய தற்சுரூபமும்*, சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறுமானவர்.

*இவர் தான் அவரென்றால்* பிதாவினிடத்தில் பரிந்து பேச வேண்டியதில்லையே ?
1தீமோ. 2:5-6 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே;

1யோ. 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

*மேலும் கவனிக்கவும்*:
இவரே அவராக இருந்தால் – தனக்கு தானே அவர் கேட்டுக்கொள்ள வேண்டுமோ? மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

யோ. 16:23 அந்த நாளிலே நீங்கள் *என்னிடத்தில்* ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் *என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்* கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை;  -

ஆகவே தான் *இயேசப்பா* என்று நாம் இயேசுவை வேத அறிவின்படி அழைக்கமுடிவதில்லை.

இவரே அவர் என்றால் – சிலுவையில் தனக்கு தானே கூப்பிட்டுக்கொண்டாரா?

மத். 27:46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.    

*உலக முடிவில் நடக்கும் காரியத்தை பார்க்கவும்*:
1கொரி. 15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, *தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு* ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

இவரே அவர் என்றால் தனக்கு தானே ஒப்புக்கொடுத்துக்கொள்வாரா?

*நம் அடிப்படையான விசுவாசம் தான் என்ன* ?
இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்புவது தானே அடிப்படை விசுவாசம்?? அப். 8:37

பிசாசு எவ்வளவு தந்திரமாக அடிப்படை விசுவாசத்தையே அநேகருக்கு கேள்விக்குறியாக்கி வைத்திருப்பதை கவனியுங்கள்.

எபி. 1:8-9 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்றும்;

*பிதாவாகிய தேவன் – தேவத்துவத்தின் தலைமையாக இருக்கிறார்* .
உலக சிருஷ்டிப்பை அவர் திட்டம் வகுத்தார்  (எரே. 51:14-15; சங். 33:9).

யோ. 14:28 சொல்கிறது பிதாவானவர் கிறிஸ்துவிலும் மேலானவர் என்று.

கிறிஸ்து அல்ல, பரிசுத்த ஆவியானவரும் அல்ல – பிதா ஒருவரே இந்த பூமி எப்போது அழியும் என்று அறிந்தவர் என்று மாற்கு 13:32ல் வாசிக்கிறோம்.

*தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்*
ஆதியிலே உலக தோற்றத்திலேயே இருந்தவர் – ஆதி. 1:2

உலகம் ஆவியானவார் இயக்கப்பட்டது மற்றும் வடிவமைக்கப்பட்டது. அவர் படைப்பை நிறைவுசெய்து அதை இயக்கினார் (யோபு 26:13; சங்கீதம் 104: 30; ஆதியாகமம் 2: 7).

தேவனுடைய சித்தத்தை மனிதகுலத்திற்கு வழங்குவதில் ஆவியானவர் ஈடுபடுகிறார்.

இயேசு சிலுவையில் (இந்த உலகத்தில்) மரித்தபின் ஆவியானவரை உலகத்திற்கு அனுப்பினார் (யோவான் 16: 7). இயேசு உயிர்த்தெழுந்தபின் பரலோகம் போய் பிதாவானவர் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறாரே !!

வருவதில் ஆவியானவரின் நோக்கம் பல மடங்கு உள்ளது (யோவான் 16: 8-14).

அவர் உலகைக் கடிந்துகொண்டார், அப்போஸ்தலர்களை எல்லா சத்தியத்திலும் வழிநடத்தினார் (எபேசியர் 3: 1-4; 1கொரி. 2: 9-10).

யோ. 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.           

நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை.  தேவன் நம்மில் வாசமாயிருக்கிறார் -  Halleluah !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக