சனி, 10 ஆகஸ்ட், 2019

#325 - உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நக்குவாய் என்ற ஆதி 3:15ம் வசனத்தை விளக்கவும்.

#325 - *உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நக்குவாய் என்ற ஆதி 3:15ம் வசனத்தை விளக்கவும்*.

*பதில்* :
வேத வல்லுனர்கள் இந்த வசனத்தை *சுவிசேஷத்தின் ஆரம்பம்* என்று குறிப்பிடுவார்கள்.

*நக்குவாய்* என்றல்ல இரண்டாவது முறையும் நசுக்குவாய் என்றே பழைய பரவலான தமிழ் வேத மொழி பெயர்ப்பும் (OV) எபிரேய மொழியிலும் (ஸ்வுஃப்) கொடுக்கப்பட்டிருக்கிறது.

“*பகை உண்டாக்குவேன்*”  என்பது– விரோதத்தை உண்டாக்குவேன் என்று பொருள்.  இந்த பகை ஏவாளுக்கும் சர்ப்பத்திற்கு மாத்திரம் பொருந்தாமல் அவர்கள் வித்துக்களுக்கும் (சந்ததிக்கும்) என்றே வசனம் வலியுறுத்துகிறது.

அந்த க்ஷனத்திலிருந்து பிசாசுக்கும் ஸ்திரீயின் வித்திற்கும் இடையே ஆவிக்குரிய பகை உண்டானது என்று அறிகிறோம்.

*பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்* என்று பூரணமான பரிசுத்தம் மாத்திரமே நிறைந்த *தேவனிடத்திலிருந்து* எப்படி *பகையை உண்டு பண்ணுவேன் என்ற எண்ணம் வரும்*?

இதில் இரண்டு கூறுகள் உள்ளன.
*முதலாவதாக*,
சத்தியத்திற்கும் / உண்மைக்கும், நீதிக்கும் உள்ள (தரம்) தரநிலை தேவனிடத்திற்கே உரியது. இந்த Standard தரத்திற்கு அவரே ஆரம்பம் / ஆதாரம்.

*இரண்டாவதாக*,
சமுதாயத்தின் பொருப்புகளோடு உருவாக்கப்பட்ட பகுத்தறிவுள்ள நபர்கள்.  

குறிப்பாக மனிதர்கள் (அல்லது ஆவிகள், எ.கா., தேவதூதர்கள்)  தங்கள் சிருஷ்டிகருக்கு (படைப்பாளருக்கு) எதிராக தங்கள் விருப்பத்தை செயல்படுத்தி கிளர்ச்சி செய்யும்போது அது பகைமையை தானாக  விளைவிக்கிறது.

அப்படியானால் – தேவன் தன்னுடைய சிருஷ்ப்பிடமிருந்து எப்போதும் எதிர்பார்த்த பரிசுத்தத்தை மனிதர்கள் கடைபிடிக்க முடியாமல் அவருக்கு எதிராக செயல்பட்டதன் விளைவு - தேவனுக்கு எதிரான பகைமை சம்பாதித்துக் கொண்டதேயன்றி தேவன் பகைக்கு சொந்தக்காரர் அல்ல.

*ஸ்திரீயின் வித்து என்றால் யார்*?
ஏவாளுடைய அனைத்து பிள்ளைகளுமா அல்லது குறிப்பாக யாராவது ஒருவரா?

மிக தெளிவாக, இந்த முழு புத்தகத்திலும் வித்து எனப்பட்ட வாக்குறுதி (ஆதி. 22:18-முடிவு வரை, கலா. 3: 8, 16) இந்த பூமியில் புருஷனின் உதவியில்லாமல்  ஸ்திரீயின் வித்தாக மாம்சத்தில் பிறந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவில் நிறைவுபெறுகிறது. (கலா. 4: 5).

*அவர் உன் தலையை நசுக்குவார் நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றால் என்ன*?
தலையை நசுக்குவது என்பது முழுமையான அழிவை குறிக்கிறது.
காலை நசுக்குவது என்பது தற்காலிகமான பாதிப்பை குறிக்கிறது.

பிசாசானவன் –
தேவனுடைய ஜனங்களை துன்புறுத்தி /

தன் வலையில் வீழ்த்தி /

சத்தியத்திற்கு விரோதமாக ஊழியர்களையும் வஞ்சித்து /

தூதர் மொழி என்கிற பெயரில் ஏராளமான ஆரம்ப கிறிஸ்தவர்களையும் தீவரவாதி போல ஆக்கி /

வேதத்தை ஆழமாக படிக்க வேண்டாம் மேலோட்டமாக படித்து ஒழுங்காக வாரவாரம் சபைக்கு வந்தாலே போதும் என்று போதிக்க கூடிய அளவிற்கு ஊழியர்களையும் உருவாக்கி;

அநேகரை தன் வழியில் விழவைப்பதன் மூலம் *தற்காலிக பாதிப்பை ஏற்படுத்த முடியுமேயன்றி நிரந்தரமான அவனுடைய அழிவை அவனால் தடுக்க முடியாது*.

இரண்டு முறை வரும் “நசுக்குவாய்” என்ற சொற்களின் முக்கியத்துவத்தில் ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறது என்று நாம் சொல்ல வேண்டும்.

மனித பாவத்திற்காக கிறிஸ்துவின் மரணம், சாத்தானால் செய்யப்பட்ட ஒரு காயம். ஆனால் கர்த்தருடைய உயிர்த்தெழுதல், பரமேறியது மற்றும் இறுதி வெற்றி ஆகியவை பிசாசின் கலக முயற்சிகளை அழித்துவிடும் என்பதே (ரோமர் 8: 20-21; 1கொரி. 15:26; கொலோ. 2:15; எபி. 2:14; 1யோ. 3: 8 ; வெளி. 20:10).

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக