#324 - *எதற்காக உபவாசிக்க வேண்டும்? எப்படி உபவாசிக்க வேண்டும்? யாரெல்லாம் உபவாசிக்கலாம்? உபவாசத்தை குறித்து முழுமையாக வேதத்தின்படி விளக்கம் தாருங்கள்*
*பதில்* :
உபவாசம் என்பது பழைய ஏற்பாட்டில் அடிக்கடி குறிப்பிடப்பட்ட ஒன்று.
ஒருவரின் மரணத்திற்கு துக்கம் கொண்டாடின போது (1சாமு. 31: 11-13; 2சாமு. 1: 11-12) அல்லது தேவன் அவர்களைத் தூக்கி எறியப்போகிறார் என்று மக்கள் அறிந்தபோது (யோனா 3: 5 -9) கடைப்பிடிக்கப்பட்டதை அறிகிறோம்.
துக்கம் காரணமாக உங்கள் மனம் வெந்து கொண்டிருக்கையில் வயிற்றை பற்றி யார் கவலைபடுவார்கள்?
மனத்தாழ்மையை வெளிப்படுத்தவும் உபவாசம் பயன்படுத்தப்பட்டது.
தாவீது தன் எதிரிகளுக்காக ஜெபிக்கும்போது தன்னைத் தாழ்த்திக் கொள்ள உபவாசத்தை பயன்படுத்தினார் (சங். 35: 12-14).
மிக முக்கியமாக,
ஒரு விசுவாசி தேவன் மீது முழுமையாக கவனம் செலுத்த விரும்பியபோது உபவாசம் பயன்படுத்தப்பட்டது.
ஒருவரின் ஜெபங்களுக்கு விடைபெற்றுக் கொள்வதை விட உணவு முக்கியமில்லை என்பது வெளிப்படுத்தியது.
யூதாவைத் தாக்க ஒரு இராணுவம் கூடிவந்தபோது, எல்லோரும் தேவனின் உதவியை நாடுகையில் அனைவரும் உபவாசம் இருக்க இராஜா அறிவித்தார் (2நாளா. 20: 1-4).
தானியேல் தன் கவனத்தை தேவன் மீது செலுத்த விரும்பியபோது, அவர் உபவாசம் இருந்தார் (தானி. 9:3).
இதையே இயேசு மத்தேயு 17: 19-21-ல் குறிப்பிடுகிறார்.
பிசாசுகள் தேசத்தில் இருந்த நாட்களில், ஒரு சீடரின் சாதாரண கண்டனத்தால் பெரிய அரக்கன் வெளியேறுவான் என்று எதிர்பார்க்க முடியாது !
அதற்குத் *தேவன் மீது தீவிர விசுவாசமும் வலுவான நம்பிக்கையும் அவசியம்*.
உபவாசம் தவறாகப் பயன்படுத்தபடலாம் என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
*உபவாசம் இருப்பதனால் தேவன் உங்கள் ஜெபத்தை கேட்கவேண்டும் என்ற நிர்பந்தத்தையோ அல்லது உபவாசம் இருப்பவரை அதிக நீதியுள்ளவனாக்கவோ செய்யாது* (ஏசா. 58: 2-4; சகரி. 7: 5-6).
தான் உபவாசம் இருப்பதை மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் இருக்கக் கூடாது என்று இயேசு எச்சரித்தார் (மத். 6: 16-18).
இது தனிநபருக்கும் தேவனுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம்.
*உபவாசம் தேவைபடாத ஒரு காலம் வரும்* என்று சகரியா தீர்க்கதரிசனம் உரைத்தார் (சகரி. 8:19).
*இயேசு பூமியில் இருந்தபோது இது நிறைவேறியது*. (மத். 9: 14-15).
புதிய ஏற்பாட்டில் உபவாசம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.
சீஷர்கள் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்பும், முக்கிய முடிவுகளுக்கு முன்பும் உபவாசம் இருந்திருக்கிறார்கள் (அப். 13: 2-3; 14:23).
*எல்லா கிறிஸ்தவர்களும் ஒரு குறிப்பிட்ட தேதியில் அல்லது ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் உபவாசம் இருக்க வேண்டும் என்று சொல்லும்படியான எந்த கட்டளையும் வேதத்தில் கிடையாது*.
உங்களுடைய சொந்த கட்டுப்பாட்டிற்காக தேவனிடத்தில் இன்னும் ஊக்கமாய் ஜெபிக்க ஐம்புலன்களையும் ஒடுக்க பட்டினி உங்களுக்கு அவசியப்பட்டால் இருப்பதில் எந்த தடையும் இல்லை. விளம்பரப்படுத்தாமல் இருத்தல் அவசியம்.
உபவாசமும் ஜெபமும் சேர்ந்தே பெரும்பாலும் காணப்படுகிறதாகையால் *உபவாசம் என்ற வார்த்தைக்கு ஆழ்ந்து ஜெபித்தல் என்றும் பொருள்கொள்ளப்படுகிறது* !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக