வியாழன், 1 ஆகஸ்ட், 2019

#311 *கேள்வி* வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்றால் பரிசுத்தமான ஓய்வுநாள் எது?

#311 *கேள்வி - வாரத்தின் முதல் நாள் ஞாயிறு என்றால் பரிசுத்தமான ஓய்வுநாள் எது?*

ஞாயிறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் பின்ன ஏன் ஞாயிற்றுகிழமையை ஓய்வுநாளாக அறிவித்து தொழுது கொள்ள சொல்கிறார்கள் முழு விவரம் தாருங்கள்.

*பதில்* :
ஓய்வு நாள் ஓய்ந்திருக்க வேண்டும் என்ற கட்டளை பிரத்தியட்சமாக  இஸ்ரவேலருக்கு மோசேயின் நியாயபிரமாணத்தின் மூலம் கொடுக்கப்பட்டது (யாத். 20:2, 8, உபா. 5:1-3, 4: 7-8, 13)

இயேசு கிறிஸ்துவின் சட்டமோ ஓய்வு நாள் அல்ல – புதிய சட்டம் யூதர் உட்பட சகல தேசத்தாருக்கும் கொடுக்கப்பட்டது (மாற்கு 16:15)

ஒய்வு நாள் என்று சொல்லிக்கொண்டு கிறஸ்தவர்கள் எந்த நாளிலும் சும்மா உட்கார அனுமதியில்லை. எல்லா நாளும் நாம் துரிதமாய் கர்த்தருக்கென்று ஓடவேண்டும்.

தேவனை தொழுது கொள்ளும் நாள் – வாரத்தின் முதல் நாள் என்று அழைக்கப்படும் ஞாயிற்றுகிழமையே. ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாள் என்று சொல்லக்கூடாது.

ஓய்வு நாள் என்பது சனிக்கிழமையை மாத்திரம் குறிக்கும் – அந்த முறை கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் முடிவுற்றது – ரோ. 10:4  !!

*ஞாயிற்றுக்கிழமையில் ஏன் கிறிஸ்தவர்கள் தேவனை தொழுது கொள்ளவேண்டும்*?

* இயேசு கிறிஸ்து வாரத்தின் முதலாம் நாள் உயிர்தெழுந்தார் மாற்கு 16:9

* அவர் உயிர்தெளுந்தப்பின் சீஷர்களுக்கு 6 முறை தரிசனமானதும் வாரத்தின் முதல் நாளில். மாற்கு 16:9; மத். 28:5-9; லூக். 24:34; 24:13-15; 24:33,36 + யோவான் 20:19; 26

* இயேசு கிறிஸ்து உயிர்தெளுந்தபின்னர் & அவர் பரம் ஏறும் வரை கிறிஸ்தவர்கள் கூடினது வாரத்தின் முதல் நாளில். யோவான் 20:19,26 அப். 2:1

* சபை ஸ்தாபிக்கப்பட்டது வாரத்தின் முதலாம் நாளில் அப். 2:1

* பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டது வாரத்தின் முதலாம் நாளில் அப். 2:1-4

* முதல் இரட்சிப்பின் செய்தி பேதுருவால் சொல்லப்பட்டது வாரத்தின் முதலாம் நாளில் அப். 2:1,38,40-41

* சீஷர்கள் அப்பம் பிட்கும்படி கூடி வந்தது வாரத்தின் முதலாம் நாள் அப். 20:7

* வாரத்தின் முதலாம் நாளில் பணம் (காணிக்கை) சேர்க்கும் படி கட்டளை பெற்றார்கள் 1 கொரி. 16:1-2

இன்னும் 12 காரணங்களை காண முடிகிறது..ஆனால் மேலே உள்ளதே போதுமானது..

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

1 கருத்து:

  1. appo aathiyagamathula iruka vasanathukkum ithukkum sammantham illaiyaa..

    7 naal


    ஆதியாகமம் 2:2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.


    appo ithu..enakku ipdila solli kuduthaaga

    பதிலளிநீக்கு