#296
*கேள்வி*
தேவன் நம்மை ஐஸ்வரிமாக்குகிறவர் என்று வேதம் சொல்லி இருக்க;
நீங்கள் #292 கேள்விக்கான பதிலில் – அதிக ஐசுவரியம்
இருமாப்பை உண்டாக்கும் என்று சொல்லியிருக்கிறீர்களே?
மேலும் நீதி 30:2ம் வசனத்தில் ஆகூர் தான் அறிவில்லாதவன்
என்றும் சொல்கிறார் – அப்படிபட்டவரின் கூற்றாகிய 9ம் வசனத்தை நாம் எப்படி கணக்கில்
கொள்வது?
*பதில்* :
ஆகூர் மாத்திரம் அல்ல,
ஆசாபும் தன்னை அறிவில்லாதவன், மிருகம் போல
இருக்கிறேன் என்கிறார் (சங் 73:22)
ஏசாயா – தான் அசுத்த உதடுள்ள மனுஷன் என்கிறார் (ஏசா 6:5)
தான் இராஜாவான போதும் ஒன்றும் அறியாத சிறுபிள்ளை என்கிறார்
சாலமோன் (1இரா 3:7)
*தேவனுக்கு முன்பதாக இவர்கள் தங்களை தாழ்த்தின வார்த்தைகள்
இவை*.
ஆகூர் – தான் ஞானத்தை கற்கவில்லை என்கிறார் (நீதி 30:3)
தேவனுடைய குமாரனின் நாமத்தை குறித்து வினவுகிறார் (நீதி 30:4)
தம்மை அண்டிக்கொள்ளும் போது – தேவன் அவர்களுக்கு எல்லா பாதுகாவலையும்
தருகிறவர் என்று சொல்கிறார் (நீதி 30:5)
அவர் சொன்ன வார்த்தை ஒன்றிலும் நாம் கூட்டிவிடகூடாதென்கிறார்
(நீதி 30:6)
வேதத்தில் இருக்கும் வார்த்தைகள் தேவ ஆவியால் கொடுக்கப்பட்டவை
என்று நாமறிகிறோம் (2தீமோ 3:16)
அவை யாவும் நம் படிப்பிக்குதலுக்கானவை என்றும் அறிகிறோம்
(2தீமோ 3:17)
தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறவர். ஐஸ்வரியம் தேவனால் வருகிறது
(நீதி 10:22)
ஐஸ்வரியம் விருத்தியானால் மனிதன் தன் மனதை அதின் மேல் செலுத்தாமல்
இருக்க வேண்டும் என்பதை சங்கீதக்காரன் மூலமாக தேவன் நமக்கு கொடுத்த ஆலோசனையை #292 பதிலில் நீங்கள் கண்டது. (சங் 62:10)
கேள்விக்காய் நன்றி பிரதர் !!
*Eddy Joel*
+91 8144 77 6229 /
joelsilsbee@gmail.com
- நீங்களும் இந்த குழுவில் இணைந்து கொள்ள கீழே
உள்ள லிங்கில் சொடுக்கவும்:
Group 2:
Group 1:
** இது வரை கேட்கப்பட்ட
அணைத்து கேள்வி பதில்களும் எமது வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக