#298 - *இயேசு கிறிஸ்து செய்த முதல் ஜெபம் வேதத்தில்
முதலாவது குறிப்பிடபட்ட ஜெபம் எது?*
*பதில்* :
நம் வாழ்க்கைக்ககு எது அவசியமோ / எதை நாம் தெரிந்து கொள்ள
வேண்டுமோ அதை மாத்திரமே வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் எழுதி வைத்திருக்கிறார்
(2தீமோ. 3:16-17, யோ. 20:30-31)
அவசியமில்லாத மற்றவைகளை மறைத்து வைத்து இருக்கிறார் (உபா.
29:29)
இயேசு கிறிஸ்து ஜெபித்ததாக முதன் முதலில் பதிவிடப்பட்ட இடம்
– அவர் ஞானஸ்நானம் எடுத்த உடனே லூக். 3:21
அவர் சகல நியாயபிரமாணத்தையும் கடைபிடித்தவராகையால் / அவரை
ஒருவரும் எந்த வகையிலும் குற்றம் பிடிக்க முடியாத அளவிற்கு வாழ்ந்து காட்டியவராகையால்
இதற்கு முன்னும் நிச்சயமாக அவர் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். (மாற்கு 14:56)
புதிய ஏற்பாட்டில் நான் அறிந்தவரை கீழ்கண்ட இடங்களில் /
சூழ்நிலைகளில் அவர் ஜெபித்த சம்பவங்கள் பதிக்கப்பட்டுள்ளன:
6முறை ஜெபித்ததாக சுவிசேஷ புஸ்தகங்களில் காணலாம்:
பாலகருக்கு நீர் வெளிப்படுத்தினீர் (மத். 11:25-26, லூக்கா 10:21)
லாசருவை மரணத்திலிருந்து எழுப்பிய போது (யோ. 11:41-42)
உம்முடைய நாமத்தை மகிமைபடுத்தும் (யோ. 12:28)
முழு ஜெபம் யோ. 17
கெத்சமனே தோட்டத்தில் 3 முறை
சிலுவையில் 3முறை
பிதாவே இவர்களை மன்னியும் (லூக்கா 23:34)
ஏன் என்னை கைவிட்டீர் என்ற வாக்கியம் (மத் 27:46, மாற்கு
15:34)
என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (லூக்கா 23:46)
ஞானஸ்நானத்தின் போது (லூக்கா 3:21)
கூட்டத்திலிருந்து விடுபட்ட போது (லூக்கா 5:16)
அற்புதங்களுக்கு பின்னர் (மாற்கு 1:35)
தண்ணீரில் நடக்கும் முன் (மத் 14:23, மாற்கு 6:46, யோ. 6:15)
12 பேரை தெரிந்தெடுக்கும் முன் (லூக்கா 6:12)
பேதுருவின் வாக்குறுதிக்கு முன் (லூக்கா 9:18)
மறுரூபமாவதற்கு முன் (லூக்கா 9:29)
சீஷருக்கு ஜெபம் கற்றுகொடுக்கும் முன் (லூக்கா 11:1)
பேருவின் விசுவாசத்திற்காக (லூக்கா 22:32)
மேலும்
பெருவாரியான ஜனங்களுக்கு போஷித்த அற்புதத்திற்கு முன், கடைசி போஜன பந்திக்கு முன், எம்மாவு சீஷரோடு
பந்தியிருக்கும் போதும்...
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக