#308 - *ஊழிய அழைப்பு இல்லை என்று சொல்லி வேதாகம கல்லூரியில் சேர்வதற்கு தடை செய்கிறார்களே இது சரியா?*
1. இன்று அனேகர் வேதாகம கல்லூரியில் (bible
college) சேர்ந்து படிக்க விருப்பப்பட்டாலும் சபையின்
ஊழியக்காரர்கள் அவர்களுக்கு ஊழிய அழைப்பு இல்லை என்று சொல்லி வேதாகம கல்லூரியில்
சேர்வதற்கு தடை செய்கிறார்களே இது சரியா?
2. அதனையும் கடந்து கல்லூரியில் சேர
முற்பட்டால் ஊழியக்காரர்கள் மனமகிழ்ந்து அனுப்பாவிட்டால் முறையல்ல என்று சொல்லி
ஆசிர்வாதத்திற்கு தடை என்று சொல்கிறார்கள்
3. ஊழியம் செய்ய போகிறவர்களை அவர்களின் சபை
ஊழியக்காரர் எண்ணை அல்லது பிறவற்றால் அபிஷேகம் செய்து அனுப்பவேண்டும் அவ்வாறு
செய்வதுதான் முறை என்கிறார்கள்
இதனை குறித்து வேதத்தின் படி விளக்கம்
தாருங்களேன்
*பதில்* :
1-
ஊழியத்திற்கென்று பிரத்யேகமாக யாரையும் புதிய ஏற்பாட்டு
காலத்தில் தேவன் அழைப்பதில்லை !!
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் ஊழியம் செய்ய
அழைக்கப்பட்டவர்கள் (1பேதுரு 2:9)
உடனே சிலருக்கு
ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும்
இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை என்ற எபி 5:4ம் வசனம் ஞாபகம்
வரும்.
கிளி ஜோசியம் போல பைபிள் ஜோசியம் பார்க்கிறவர்களுக்கு
முன்னேயும் பின்னேயும் படிக்கும் பழக்கம் இருக்காது !!
அவர்கள் 5ம் வசனத்தை படித்து பார்த்தார்களென்றால் 4ம் வசனமானது
கிறிஸ்துவை குறித்து சொல்லப்பட்டதென்று அறிந்து கொள்வார்கள்.
வேதாகமத்தை முறையாய் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் பைபிளை
மாத்திரம் சொல்லிக்கொடுக்கும் பைபிள் காலேஜ்க்கு போனால் கிறிஸ்தவனாக வெளியே வரலாம்.
இல்லையென்றால் – ரெவரன்டாகவோ, ஃபாதராகவோ,
பாஸ்டராகவோ, குருவையாவாகவோ, ஆயராகவோ வெளியே வந்து அந்தந்த நிறுவனங்களுக்கு சம்பளத்திற்கு வேலைக்கு
செல்வார்கள் !!
ரெவரன்ட் என்பது எந்த மனிதனுக்கும் பொருந்தாது – அது
தேவனுடைய நாமம் (சங். 111:9)
வேதாகம கல்லூரியில் போய் வேதாகமத்தை முறையாய் படிக்கும் போது
இன்னும் பல ஆழமான காரியங்களை கற்றுக்கொள்ள முடியும் - ஆனால் சரியான இடத்திற்கு போக
வேண்டும்.
அதை உணராமல் :
பெந்தேகோஸ்தே கல்லூரிக்கு போனால் – பாஸ்டராக்கி விடுவார்கள்
சி.எஸ்.ஐ கல்லூரிக்கு போனால் – ஆயராக்கி விடுவார்கள்
கத்தோலிக்க கல்லூரிக்கு போனால் – ஃபாதராக்கி விடுவார்கள்
சால்வேஷன் கல்லூரிக்கு போனால் – குருவையாவாக்கி விடுவார்கள்
எப்போ கிறிஸ்தவனாவது?
இந்த பதிவை கண்டு சிலருக்கு மனவருத்தம் வரலாம் – ஆனால் கவனமாய் வேதத்தை
ஒப்பிட்டு பார்த்து – மரண வழிக்கு தப்பிக்க வேண்டும்....
2-
ஊழிய ஆசிரியர்கள் அல்ல – தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறவர்.
சரியான பள்ளியாக இருந்தால் – இந்த எண்ணம் வராதே !!
3-
அபிஷேகம் என்பது நியமனம் – அது இஸ்ரவேலரின் முறை.
ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட யாவரும் கிறிஸ்துவுக்கென்று அபிஷேகம்
செய்திருக்கிறார். வசனங்களை வாசித்து பார்க்கவும்.
2கொரி. 1:21, 1யோ. 2:20, 1யோ. 2:27
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக