#307 - *நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் - விளக்கம் தேவை*
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். பிலிப்பியர் 3:2 - ஐயா இந்த வசனத்திற்கு விளக்கம் தேவை
*பதில்* :
கிறிஸ்துவின் எதிரிகளை பிரதிநிதித்துவப்படுத்த பவுல் நாய்களின் உருவத்தை / வார்த்தையை பயன்படுத்துகிறார்.
பிலிப்பியர் 3: 2ல் "நாய்களிடம் ஜாக்கிரதை / தீய தொழிலாளர்களிடம் ஜாக்கிரதை / தவறான விருத்தசேதனம் உள்ளவர்களை குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகிறார்.
பிலிப்பியர் 3 இன் சூழலைக் கருத்தில் கொள்ளும் போது:
கிறிஸ்துவின் எதிரிகளை "நாய்கள்" என்று அடையாளம் காட்டுகிறது.
தவறான விருத்தசேதனத்தை குறித்து பிலி 3ம் அதிகாரம் 3-16 வசனங்கள் வரை விவரிக்கப்பட்டுள்ளன.
"உண்மையான விருத்தசேதனத்தை பெற்ற பவுலும் மற்றவர்களும் (வச. 3) மாம்சத்தில் நம்பிக்கை வைக்கவில்லை (அதாவது நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பது), மாறாக அவர்கள் கிறிஸ்துவை நம்பினார்கள்.
தவறான விருத்தசேதனம் போன்ற மாம்சத்தை பவுல் குறிப்பாக நம்பியிருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக அவர் "கிறிஸ்துவின் நிமித்தம் இழப்பு" என்று கருதினார் (வச. 7).
கிறிஸ்துவின் மூலம், தேவனின் மேல்நோக்கிய அழைப்பின் பரிசுக்கான இலக்கை நோக்கி அவர் அழுத்தினார் (வச. 14).
17 ஆம் வசனத்தில், பவுல் தன்னைப் பின்பற்ற வேண்டிய ஒரு நபராக தன்னைக் பற்றி கூறுகிறார். “சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். "
இந்த முறைக்கு நேர்மாறாக - ஏற்ப நடக்காதவர்களிடமிருந்து அவர் நம்மை விலக்குகிறார். அவர்களை (நாய்கள்), என்று மேலும் 18-19 வசனங்களில் விவரிக்கப்படுகின்றன.
3:18- ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
3:19- அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
*ஏன் நாய் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்?*
நாய்களின் இயல்பான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகள் பொதுவாக அசுத்தமானவை.
உதாரணமாக, நீதிமொழிகள் 26:11-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ள பழக்கத்தைக் கவனியுங்கள்.
நாய்களின் அசுத்தமும் அவற்றின் நடத்தைகளும் வேதவசனங்களில் பன்றியுடன் கூட வகைப்படுத்தப்பட்டுள்ளன (லேவி. 11: 7, 27; ஏசா. 66: 3; 2 பேதுரு 2:22).
பெரும்பாலும் நாய்களின் பங்கு குப்பை தொட்டியோடு தான்.
தெருக்களிலும் சந்துகளிலும் விடப்பட்டிருந்த நாய்களின் இருப்பு இரவில் ஆபத்தை உருவாக்கியது.
புறஜாதியினரிடையே வளர்ப்பு நாய்கள் இருந்ததை காணமுடியும். (மத் 15:27)
நாய்களைப் பற்றிய இந்த உண்மைகள் பழைய ஏற்பாட்டில் பல முறை பிரதிபலிக்கின்றன.
யாத். 22:31, 1இரா. 14:11, 16:4, 21:19-24; 22:38; 2 இரா. 9:10, 36, சங். 68: 23 எரே. 15: 3.
பொல்லாதவர்களை குறித்து பேசும் போது நாய்களுக்கு ஒப்பிடப்பட்டது.
உபா. 23:18, சங். 22:16, ஏசா. 56: 10-11, மத். 7: 6, மத். 15:26, லூக்கா 16:21
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக