#306 - *கிறிஸ்தவ பெண்கள் புருவ முடியை சீர்ப்படுத்தலாமா?*
*பதில்* :
கண் மை மற்றும் கண் புருவத்தை அழகு படுத்துவதை குறித்த 3 இடங்களில்
வேதத்தில் காணமுடியும்.
2 இரா. 9:30-37; எரே. 4:30; எசே. 23:40; நம் வாய், கண், மூக்கு, காது – முக வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று - தேவன் தாமே அவர் விருப்பப்படி
நம்மை வணைத்து இந்த உலகத்திற்கு அனுப்பியுள்ளார் (1கொரி. 12:18)
தலை முடியை வெட்டிக்கொள்வதும், முகம் கழுவிக்கொள்வதும், அலங்கரித்துக் கொள்வதும்
மற்றவர் முகங்கோனாமல் இருக்கும் வரை ஆபத்தில்லை.
மற்றவரை கவர வேண்டும் அல்லது தன்பால் மற்றவரை ஈர்க்க
வேண்டும் என்று செய்யும் எந்த காரியமும் பாவத்தில் முடிய அதிக வாய்ப்பு
இருக்கிறது. இச்சை ஒரு பாவமல்லவா? (1யோ. 2:17)
புருவத்தை கூர்மையாக்கி / அல்லது அகலமாக்கி அழகு
படுத்துவதன் மூலம் முக அழகு ஒருவேளை கூடலாம்.
ஆனால் அதன் பயன்?
திருமண நாளுக்கென்று செய்யப்படும் அலங்காரம் – அனைவரையும் மகிழ்விக்கும்.
ஆனால் மற்ற நாட்களில் செய்யப்படும் அலங்காரம் அனைவரையும்
ஈர்க்கும்.
இந்த செயல் தேவனை மகிமைபடுத்துமா என்பதை நிதானித்து நாம்
செயல்படவேண்டும் (கொலோ. 3:17, 1கொரி. 10:31)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக