வியாழன், 27 ஜூன், 2019

#243 - எல்லா யூதர்களும் ஏன் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை?

#243  - *எல்லா யூதர்களும் ஏன் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை?*

*பதில்*:
ஏறத்தாழ 1,000 வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இரட்சகராகிய தேவன் மாம்சமாகி பூமியில் வந்தவரை (1தீமோ. 3:16) ஏற்றுக்கொள்ளாதது அவர்களது முரண்பாட்டையே காண்பிக்கிறது.

அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோ. 1:10-11

எந்த ஜனத்தை தம் சொந்த ஜனமாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தன் வாக்குதத்தங்களையும் தன் உடன்படிக்கையையும் மோசேயின் மூலமாக கொடுத்து அவர்களுக்கு இரட்சகரை அனுப்புவேன் என்று சொல்லியும் அவரை ஏற்றுக்கொள்ளாதது ஏன்?

இதற்கான காரணத்தை இயேசு கிறிஸ்துவே ஒரு இடத்தில் சொல்கிறார். .... ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். யோ. 10:26

யூதர்கள் தேவனை பற்றிகொண்டாலும், அவர்கள் தேவனுடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை.

அப்போஸ்தலனாகிய பேதுரு – யூதர்களை குறித்து சொல்லும் போது – அவர்கள் தேவனுக்கு கீழ்படியாதவர்கள் என்று சொல்கிறார். .... விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள் என்றார் (1பேதுரு 2:6-8)

விசுவாசிப்பதும் கீழ்படிவதும் இரண்டுமே வேதாகமத்தில் அவசியம். ஒன்றில்லாமல் மற்றது இல்லை (எபி. 3:18-19, எபி. 4:1-2, எபி. 4:6, 4:11)

யூதர்களோ தங்கள் கோட்பாடுகளில் வைராக்கியமாய் இருந்தார்களேயன்றி – தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியவில்லை. கீழே வசனத்தை வாசிக்கவும்:

என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.  அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.

அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.  நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.  நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்.  தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?  பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.  நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.  (யோ. 5:37-47)

யூதர்கள் கீழ்படியமாட்டார்கள் என்று ஏற்கனவே தேவன் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (ஏசா. 65:1-7)

தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். (ரோ. 10:2-3)

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் – ஒரு மேசியாவானவர் எப்படி இருக்க வேண்டுமா அப்படி இயேசு நடந்து கொள்ளாததால் அவரை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (யோ. 6:14-15, 26-27, 66)

இதை அறியாமல் பெயர் கிறிஸ்தவ உலகம் இன்னமும் யூதர்களை கிறிஸ்தவர்களாக பாவிப்பது பரிதாபம்.

புறஜாதியினர் (யூதரல்லாதோர்) இரட்சிக்கபடும் வரைக்கும் இந்த சூழ்நிலை யூதர்கள் மத்தியில் காணப்படும். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் முன்னர் மற்றவர்கள் (கிறிஸ்தவரல்லாதவர்கள்) அவரை ஏற்றுக்கொள்வது கொடுக்கப்பட்ட கிருபையின் காலம். (ரோ. 11:15-36)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர், கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

----*----*----*----*----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக