#242 - *ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள்
என்று தனது விசுவாசிகளிடம் உபதேசம் சொல்லும் இயேசு; தன்னை அடித்த சேவகர் ஒருவரிடம் ஏன் என்னை அடித்தீர் என்று கேள்வி கேட்பது இயேசுவின் கோழைத்தனத்தை காட்டுவதாக பைபிள் இயேசுவை கேவலப்படுத்துகிறது. (மத். 5:39, யோ. 18:22-23) - விளக்கவும்*
*பதில்:*
இயேசு கிறிஸ்து எந்த சூழ்நிலையிலும் பாவஞ்செய்யவில்லை. அவர் வாயிலே வஞ்சனை கூட காணப்படவுமில்லை (1பேதுரு
2:22)
அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ் கூட அவர் குற்றமில்லாதவர்
என்று கூறினான் (மத். 27:4)
இயேசுவை விசாரித்து கொண்டிருந்த அதிகாரியான பிலாத்துவின் மனைவி
– இயேசுவானவர் நீதிமான் என்றாள் (மத். 27:19)
தீர விசாரித்த அதிகாரியான பிலாத்துவும் – இவர் குற்றமற்றவர்
என்று தீர்ப்பு கொடுத்தார் (மத். 27:23-24)
சிலுவையில் தொங்கிகொண்டிருந்த கள்ளன் – இயேசு தகாததொன்றையும்
செய்யவில்லை என்றான் (லூக்கா 23:41)
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த படைதலைவன் – இயேசு உண்மையான
நீதிபரர் என்றான் (லூக்கா 23:47)
இயேசுவும் – தன்னிடத்தில் எந்த குற்றம் இருந்தால் கண்டு
பிடியுங்கள் என்று ஜனங்களிடத்தில் சவால் விட்டார் (யோ. 8:46)
கேள்வியில் கோடிட்ட வசனத்திலேயே – இயேசு கிறிஸ்து சொன்ன போதனை
விளங்கும் !!
à யோ. 18:23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், *தகாததை ஒப்புவி*; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில்,
என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பி என்ற
கூற்று இதிலேயே புலப்படுகிறதே....
நான் தவறு செய்தால் அதை காண்பி என்று அவர் சொல்வதை நாம்
கவனிக்க வேண்டும். செய்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர் போதனை.
செய்த தவறை ஒருவர் சுட்டிக் காட்டினால் (கன்னத்தில்
அறைந்தால்) அதை மறுதலிக்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அவர் போதனை !!
அதை தான் இயேசு வெளிப்படுத்துகிறார் – நான் செய்த தவறை ஒப்புவி
என்கிறார்.
மேலும் – ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில்
இருக்கும் போது, குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவரை
தாக்குவது சட்டவிரோதம். அது எந்த கைதிக்கும் உள்ள உரிமை. அதை கிறிஸ்து
நிலைநாட்டுவதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய பாடம்.
காற்றை அதட்டி அதை அடக்கினார். பிசாசுகள் இவரை கண்டு
ஓடினது. இயேசுவின் கட்டளைக்கு பிசாசுகள் கீழ்படிந்தது (மத். 8:31) – மரித்து 4 நாள்
ஆனபோதும், அழுகிபோன சரீரம் கூட இவர் வார்த்தைக்கு கீழ்படிந்து நல்ல ஆரோக்யத்தோடு
திரும்ப வந்தது. இப்படி எத்தனையோ
அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்த இயேசு, இந்த நேரத்தில்
அமைதியாய் தன்னை துன்புறுத்தினவர்களை பயமுறுத்தாமலும், அவர்கள்
தங்கள் கடமைகளை செய்ய விட்டதையும் கவனிக்க வேண்டும் (1பேதுரு 2:23)
ஏன் என்னை அடிக்கிறாய் என்று கேட்டதன் மூலம் தன் உரிமையை
நிலைநாட்டினார்.
தான் செய்த தவறு என்ன என்பதை - நிரூபி என்று சொன்னதின்
மூலம் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பிக்கவேண்டும் என்ற தன் போதனையையும்
நிலை நாட்டினார் !!!
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக