#240 - *நம் உள்ளத்தில் நினைப்பதை சாத்தானால் அறிந்து கொள்ள
முடியுமா?*
*பதில்:*
நம் எண்ணங்களை சாத்தான் அறிந்து கொள்ள முடியும் என்று எந்த வசன ஆதாரமும்
காணமுடிவதில்லை. அவனால் நம் எண்ணங்களை அறியமுடியும் என்று தோன்றவில்லை காரணம்:
1)
சாத்தான் என்பவன் சிருஷ்டிக்கப்பட்டவன் தான். தேவனை தவிர
வேறு யாரும் சர்வ வியாபிகர் அல்ல. தேவன் மாத்திரமே சகலவற்றையும் அறிந்தவர் (சங்.
139).
2)
மனிதனோடு தூதர்களோ சாத்தானோ இடைபட்டு காரியத்தை அறிந்து கொள்கிறதை
நாம் யோபு 1:6-12 மற்றும் மத். 4:1-11ல் பார்க்கிறோம்.
3)
நம் செயல்பாடுகளின் ஊடே பிசாசு நம்மை அறிந்து அதற்கேற்றார்போல
தன் பொய்யான ஆலோசனைகளை வழங்கி நம்மை திசை திருப்ப முயற்சிப்பான். அவன் தன்னை ஒளியின் தூதனாக பாவித்து மனிதர்களின்
மனதை மயக்க கூடியவன் – அவன் பக்கம் இழுக்க அறிந்தவன் (2கொரி. 4:3-4, 11:13-15)
மனிதர்களை விட அவன் வயதில் மூத்தவன் – ஆகவே சர்வ தந்திரங்களையும்
அவன் உபயோகிக்க அறிந்தவன். தேவனுடைய துணையால் மாத்திரமே அவனை ஜெயிக்க முடியும் (எபி.
2:14)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக