#239 - *ஈசாக்கு தியானம் செய்தான் என்று வருகிறதே - விளக்கவும்* ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே
போயிருந்து, தன்
கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ஆதியாகமம் 24:63
*பதில்:*
இது மிக சாதாரணமான கேள்வி என்று நினைத்து விட முடியாத ஒரு கவனிக்க வேண்டிய
பதம்.
முழு வேதாகமத்திலும் இந்த பதம் ஒரே ஒரு முறை தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது
!! தமிழில் நாம் கிட்டதட்ட 19 இடங்களில் நாம் பார்த்தாலும் ஆதி. 24:63ம் வசனத்தில்
வரும் தியானம் என்ற பதத்திற்கும் மற்ற இடங்களில் வரும் பதத்திற்கும் சிறிய
வித்தியாசம் உண்டு.
1)
ஆதி. 24:63ல் வரும் ஒரிஜினல் மூல எபிரேய வார்த்தை – சூஆக் –
அதாவது உத்வேகத்துடன் ஆழ்ந்த சிந்தனை என்று பொருள்படுகிறது.
2)
ஆனால் தியானம் என்று வரும் மற்ற இடங்களில் வரும் ஒரிஜினல்
மூல எபிரேய வார்த்தை – ஹாக்கா –
கீழ்கண்ட மெல்லிய வித்தியாசத்தில் அதன் அர்த்தம் வேறுபடுகிறதை
கவனிக்கவும்
• imagine / கற்பனை (2)
சங். 2:1;
சங். 38:12
• meditate / தியானம் / நிதானமாய் ஆழ்ந்து படித்து அசைபோடு (6)
யோசு_1:8;
சங். 1:2; சங். 63:6; சங். 77:12;
சங். 143:5; ஏசா. 33:18
• mourn / புலம்பு / துக்கப்படு / விசனப்படு
/ துயரப்படு (5)
ஏசா. 16:7;
ஏசா. 38:14; ஏசா. 59:11(2); எரே. 48:31
• mutter / முனுமுனுத்தல் (1)
ஏசா. 8:19
• muttered / வசனிக்கிறது (1)
ஏசா. 59:3
• roaring / கர்ச்சிப்பது (1)
ஏசா. 31:4
• speak / விளம்பு / பேசு / சப்தமிடு (3)
சங். 35:28;
சங். 115:7; நீதி. 8:7
• speaketh / உரை (1)
சங். 37:30
• studieth / கொப்பளி / பேசு (2)
நீதி. 15:28; 24:2
• talk / பேசு / ஆர்ப்பரி (1)
சங். 71:24
• utter / சொல்லு (1)
யோபு
27:4
• uttering / பேசுதல் (1)
ஏசா. 59:13
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக