வெள்ளி, 21 ஜூன், 2019

#238 கேள்வி: இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தற்கான காரணம்?

#238
கேள்வி:

இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தற்கான காரணம்?
Brother kindly send details of the above question....

பதில்:


பழைய உடன்படிக்கையிலிருந்து புது உடன்படிக்கைக்குள் நுழையும் போது லேவி கோத்திரத்திலிருந்து பிரதான ஆசாரியத்துவமானது யூதா கோத்திரத்திற்கு மாற்றப்படுவதை எபிரெயர் புத்தகம் நமக்கு விவாதித்து கொடுக்கிறது. (அதிகாரம் 7-8)

தாவீதின் வம்சத்தில் இருப்பதும் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் – மத் 1:1, மத் 9:27, லூக் 18:38, ரோ 1:5, 2தீமோ 2:8,

இரண்டையும் சேர்த்தே சொல்லப்படுவதையும் கவனிக்கவும்.
வெளி 5:5, வெளி 22:16.

தாவீது என்கிற தமது உத்தம விசுவாசியுடனான உடன்படிக்கையை நிறைவேற்றி , அவர் வம்சத்தில் என்றென்றும் ஆட்சி செய்யும் ஒருவர் அவர் வேரிலிருந்து உருவாகும் கிளையாக / மேசியாவாக உருவெடுப்பது வாக்குதத்தம்.  2சாமு 7:12-16; ஏசா 9:6-7; எரே 23:5-6).

யூதாவிலிருந்து இயேசு வந்ததற்கு முதல் மற்றும் அவசியமான காரணம், ஒரேபேறான தனித்துவமான மற்றும் தந்தையின் "முதல் பிறந்த" ஏக சுதன் என்பதே. (யோ1:14; 1:18; 3:16 3:18; ரோ.8:29; கொலோ 1:15; 1:18; எபி.1:6; வெளி.1:5; 1யோ.4:9)

ரூபன் சரீரத்தின்படி யாக்கோபின் முதல் பிறந்த மகன் என்றாலும், தன் தவறான நடத்தை மூலம் பரம்பரை உரிமையின் இரட்டை பகுதி உரிமைகளை அவர் இழந்துவிட்டதால் - அவர் அவற்றை யூதாவிடம் இழந்தார்.  ஆகவே  நியமனத்தின்படி யூதா முதல் பேறான குமாரனானார் (ஆதி 49:3-4, 1நாளா 5:1)

இந்த காரணத்திற்காகவே "ஆட்சியாளரின் செங்கோல்" யூதாவுக்கு சொந்தமானது (ஆதி 49:10; எண் 24:17)

யூதாவின் மூத்த சகோதரர்களான சிமியோனும் லேவியும் ரூபனின் இடத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களான காரணத்தை தெளிவாக ஆதியாகமம் 34ஆம் அதிகாரத்தில் விளங்கும். (ஆதி 34, 49:5-7)

நன்றி

Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக