வியாழன், 20 ஜூன், 2019

#237 கேள்வி: வெளி 19:18 வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் - விளக்கவும்

#237
கேள்வி:

பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன், அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். வெளி 19:18

Please. Explain d above. Verses. Thank u.👆


பதில்:

வெளிபடுத்தல் புத்தகம் இரகசிய மொழியில் எழுதப்பட்டவை – ஏறத்தாழ 99சதவீதம் தகவல்களை நாம் வெளிபடுத்தி தான் புரிந்து கொள்ள வேண்டும்.

பத்மூ தீவில் தனிமைபடுத்தப்பட்ட யோவானுக்கு தேவன் காண்பித்த இந்த தரிசனங்கள் அனைத்தும் decode செய்யவேண்டும், அதாவது written in Signified language குறியீட்டு மொழியில் எழுதப்பட்டவைகளை / இரகசிய மொழியில் எழுதப்பட்டவைகளை கண்டு பிடிக்க வேண்டும். (வெளி 1:1)

அவை எதற்குமே நேரடி அர்த்தம் கொள்ள முடியாது.

சாத்தானுக்கு எதிராக தற்போது நடந்து கொண்டிருக்கும் போரில் சபையின் வெற்றியை குறிக்கும் சம்பவம் இது.

சூரியன் மீது தூதன் நின்று கொண்டிருப்பது – உலகமனைத்தின் மீதும் கொண்ட வெற்றியை குறிக்கிறது.

ஆகாய மத்தியில் – சகல பூமியின் அதிகாரத்திற்கும் மேலானவையை குறிக்கிறது.

பறவைகளை ஆகாரத்துக்கு அழைப்பது – யுத்தத்தின் வெற்றியை கொண்டாட (எசே 39:17-18)

ராஜாக்களின், சேனைத்தலைவர்களின், பலவான்களின், குதிரைகளின், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர் மாம்சத்தையும் – எந்த வித்தியாசமும் இல்லாமல், அதிகாரம் உள்ளவர்கள், பெலசாலிகள், பணக்காரர்கள், வீரர்கள், கோழைகள் என்று தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படியாத அனைத்து தரப்பினரும் பட்சிக்கப்படுவார்கள்.

நன்றி

Eddy Joel
+968 93215440 / joelsilsbee@gmail.com 

- கேள்வி & வேதாகம பதில்கள் - நீங்களும் இணைந்து கொள்ள:

Group 1:

Group 2:

** அனைத்து கேள்வி பதில்களும் வலைதளத்தில் காணலாம். https://joelsilsbee.blogspot.com/search/label/Bible%20Questions  



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக