செவ்வாய், 18 ஜூன், 2019

#235 - 1கொரிந்தியர் 7: 36ன்படி சிலர் தகப்பன் மகளை திருமணம் செய்யலாம் என்கிறார்கள்...விளக்கவும்..

#235 - *1கொரிந்தியர் 7: 36ன்படி சிலர் தகப்பன் மகளை திருமணம் செய்யலாம் என்கிறார்கள்...விளக்கவும்..*

1கொரிந்தியர் 7: 36 - ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.

இந்த வசனத்தை பதிவு செய்து வோதாகமத்திற்கு எதிரான சிலர் தகப்பன் மகளை திருமணம் செய்யலாம் என்கிறார்கள்...

வேதாகமத்தின் அடிப்படையில் இதன் உண்மையான விளக்கம் வேண்டும்?

பதில்:

கிறிஸ்தவர்கள் எப்போதும் வேதாகமத்தை – முன்னும் பின்னும், முழு அதிகாரத்தையும் வாசித்து பழக வேண்டும். அப்போது எந்த பகுதியின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

திருமணத்தின் காரியங்களை விளக்கும் இந்த அதிகாரத்தில் ஒரு தகப்பன் தன் மகளின் கன்னிபருவம் (திருமண வயதை) கடந்து விட்டதே என்றும் திருமணம் செய்யாமல் அவள் வாழ்வது சரியல்லவென்றும் எந்த தகப்பனும் நினைத்து கவலை பட வேண்டாம். அவள் கன்னிபருவம் கடந்தாலும், அவளுக்கு திருமணம் செய்து வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று இந்த வசனம் சொல்கிறது. நான் கூறிய இந்த அர்த்தம் கீழே வரும் 38ம் வசனத்தை வாசிக்கும் போது புரிதல் உண்டாகும்.

1கொரி 7:38 இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான்.

நன்றி



*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக