#234 - *உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
சங்கீதம்
137:9* - சங்கீதத்திற்கு விளக்கம்தேவை.
*பதில்:*
வேதாகமம் நாம் தற்போது பார்ப்பது போல அதிகாரங்களும்
வசனங்களும் தனிதனியாக எழுதப்படவில்லை.
அதை எழுதியவர்கள் முழு கடிதமாகவோ பாடலாகவோ எழுதினார்கள். அந்த
தொகுப்புகளை வேத வல்லனர்கள் 1551ம் ஆண்டு
துவங்கி அதிகாரங்களாகவும் வசனங்களாகவும் எழுதப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்
பிரித்தார்கள்.
ஆகவே எந்த வசனத்தையும் நாம் தனியே எடுத்து படித்து
அர்த்தங்கொண்டால் நம்மை திசைதிருப்பி விட்டு விடும்.
எப்போதும் – அந்த முழு பகுதியையும் வாசித்தால் தான்
எழுதப்பட்ட நோக்கமும் – யார், யாருக்கு, எப்போது எழுதியது
என்று நாம் அச்சு பிறளாமல் புரிந்து கொள்ளமுடியும்.
உங்கள் கேள்வியின் வசன பகுதியானது – தங்கள் எதிரி தேசமான பாபிலோன்
ஆற்றங்கறையில் உட்கார்ந்து தங்கள் தேசத்தை குறித்து அழுதுகொண்டிருந்த நேரத்தில் அந்த
பாபிலோனியரின் கொடிய செயலின் பதிலாக சொன்ன வார்த்தைகள் தான் இவை. கீழே உள்ள
வசனங்களை வாசிக்கவும் – தெளிவாக புரிந்து கொள்ள முடியும்:
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். 137:1
பாபிலோன் குமாரத்தியே,
பாழாய்ப்போகிறவளே, நீ
எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல்
மோதியடிக்கிறவன் பாக்கியவான். (சங் 137:8-9)
பாபிலோன் குமாரத்தி – பாபிலோன் ஜனங்களை குறிக்கிறது
உன் குழந்தை - தங்களை
அடிமைபடுத்தி கொடுமைபடுத்தி நொருக்கி கொண்டிருக்கும் பாபிலோன் ஜனங்களையும் வம்சத்தையும்
குறிக்கிறது.
அடிமையில் கிடக்கும் இஸ்ரவேலரான தேவ ஜனங்களை மீட்டெடுக்கும்
நபர் பாக்கியவான் என்கிறார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக