#233 *கேள்வி*: வெளி 19:7-9ம் வசனத்தின் அடிப்படையில் இயேசுவிற்கு கல்யாணம், மனைவி உண்டு என்று இந்துக்கள் கூறுகிறார்கள். எப்படி பதிலளிப்பது? இது உவமை தான்...இருப்பினும் வேத வசனங்களின் மூலம் சொல்லிதாங்க.
*பதில்*:
வேதத்தை அருகாமையில் வைத்துக்கொண்டு குறிப்பிடுகிற எல்லா வசனத்தையும் வேதத்தில் வாசித்து பொறுமையாய் இந்த பதிவைப் படிக்கவும்.
கணவன்-மனைவி என்பவர்கள் இரு வேறு தனி உருவங்களானாலும் அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று வேதம் சொல்கிறது (ஆதி. 2:24, மத். 19:6)
சொந்த புருஷன் அல்லது சொந்த மனைவி இல்லாதவன் வேசித்தனம் செய்ய *மிக அதிக வாய்ப்பு இருக்கிறது* (1கொரி. 7:2)
சொந்த மாம்சத்தை எப்போதும் தாமாகவே கவனித்துக் கொள்வார்கள் (எபே. 5:29)
மனிதன் பாவம் செய்த போது தேவனிடத்திலிருந்து துரத்தப்பட்டான் (ஆதி. 3:23-24)
தாம் படைத்த மனிதனின் பாவத்தை நீக்கி அவனை திரும்பவும் தன்னிடத்தில் சேர்க்க வேண்டுமானால் பாவமில்லாத ஒருவர் அந்த பாவத்தை அவனில் இருந்து நீக்கவேண்டும்.
ஆகவே வார்த்தையானவர் மாம்சத்தில் பூமிக்கு வருகிறார் (1யோ. 4:3; யோ. 1:14; 1தீமோ. 3:16)
தேவன் கொடுத்த 10+603 கட்டளைகளையும் எந்த மனுஷனும் முழுமையாக கடைபிடிக்கவே முடியாது என்று நினைத்து கொண்டிருந்த மனிதர்களுக்கு எந்த மனிதனும் தேவனுடைய கட்டளையின்படி வாழமுடியும் என்று அவர் (இயேசு) வாழ்ந்துக் காட்டினார் (மத். 19:10, யோ. 8:46, லூக். 23:47, எபி. 7:26, மத். 5:17)
இயேசுவானவர் திடீரென்று வானத்திலிருந்து குதிக்கவில்லை.
மிருகத்தின் சரீரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.
மிருகம் போலவும் வரவில்லை.
அழுக்கை உருட்டி உருவமாகியும் வரவில்லை.
ஆனால், நம்மைப்போல உள்ள சூழ்நிலையில் வாழ்ந்து இருந்து பரிசுத்தமாய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதால் மாம்சத்தில் நம்மைபோல தாய் வயிற்றின் வழியாக பிறந்தார் அவர்.
எந்த புருஷனுடைய வித்தினாலேயும் வரவில்லை.
மரியாளும், அவளுக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பும் (திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டவர்) மாம்சத்தில் கூடி அல்லது சரீரமாய் ஒன்று சேர்வதற்கு முன்னரே மாியாளின் வயிற்றில் இயேசு கர்ப்பமாக உருவானார் (மத். 1:18,19, 25)
*ஆகவே அவர் யோசேப்பின் குமாரன் என்று அழைக்கப்படாமல் தேவ குமாரன் என்று அழைக்கப்பட்டார்* (லூக். 1:32)
இயேசு கிறிஸ்து பரிசுத்தமாய் வாழ்ந்து, தான் வந்த நோக்கம் நிறைவேறும்படி மனிதர்களின் பாவங்களை நீக்க தன்னையே உயிருள்ள ஒரே பாவ நிவாரண பலியானார் (எபி. 9:14)
அதன் நிமித்தம் யாரெல்லாம் கிறிஸ்துவை சேர்கிறார்களோ அல்லது அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து அவரை ஏற்றுக்கொள்கிறார்களோ (ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார்களோ) அத்தனை பேரும் அவரோடு (கிறிஸ்துவோடு) இணைந்து விடுகிறார்கள் (அப். 2:47) அதாவது ஒரே மாம்சமாகிவிடுகிறார்கள். அவர்கள் யாவரும் கிறிஸ்துவை போல தேவனுடைய குமாரர்கள் ஆகிறார்கள் (யோ. 1:12)
இந்த இணைப்பையே திருமணத்திற்கு *ஒப்பாக* வேதத்தில் பேசப்படுகிறது (வெளி. 21:2, ஏசா. 54:5, 61:10, 2கொரி. 11:2, எபே. 5:25-27, 30-32)
குடும்பம் நடத்துவதும் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளை பெற்றெடுத்து பேரப் பிள்ளைகளை வளர்த்து வம்சம் விருத்தி செய்பவர்களும் கடவுளாக இருக்க முடியாது.
அதை மனிதர்களும் பறவைகளும், மிருகங்களும் செய்யவேண்டும் என்ற கட்டளை கடவுளால் கொடுக்கப்பட்டது (ஆதி. 1:22, 28, 8:17)
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரைக்கும் அவரைக் குறித்தவற்றை அவரை ஏற்காதோர் அநேகர் *விரோதமாகவே பேசுவார்கள்*. லூக் 2:34, ஏசா. 8:14-15; ஓசியா 14:9; மத். 21:44; யோ. 3:20, 9:29; ரோ. 9:32; 1கொரி. 1:23; 2கொரி. 2:15;
சத்தியத்தை (உண்மையை) ஏற்காதவர்கள் ஆக்கினைக்கு உள்ளாக்கப்பட்டு நியாயத்தீர்ப்பில் தங்களது ஆத்துமாவிற்கு நித்திய அழிவையே தேடிக்கொள்வார்கள். 2தெச. 1:7-8, 2:11-12
விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; 1பேதுரு 2:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி & உலக வேதாகம பள்ளி (USA)
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய* :
https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக