ஞாயிறு, 16 ஜூன், 2019

#232 - பொய் சொன்ன தீர்க்கதரிசியை விட்டு கர்த்தர் ஏன் தேவனுடைய மனுஷனை கொன்றார்?

#232 - *பொய் சொன்ன தீர்க்கதரிசியை விட்டு கர்த்தர் ஏன் தேவனுடைய மனுஷனை கொன்றார்1இரா. 13:12-18

*பதில்:*
இந்த காலத்திற்கு மிக அவசியமான ஒரு முக்கியமான கேள்வி.

தேவனுடைய வார்த்தை என்பது எப்போதும் மாறாது.
ஒரு முறை சொன்னது
எத்தனை வருடங்களானாலும்
யார் வந்து சொன்னாலும்
எப்படி வந்து சொன்னாலும்
எத்தனை அற்புதங்களோடு வந்து பறைசாற்றினாலும் மாறாதது.

பணத்திற்கும் சொத்திற்கும் விலைபோகாமல் தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டிருந்த அந்த தேவ மனுஷன் – வேறொருவன் வந்து தானும் தேவனுடைய தீர்க்கதரிசி தான் என்று தேவனுடைய நாமத்தில் சொன்னதும் – அவன் சொன்னதை நம்பி விட்டான் !!

ஆகவே உடனே தண்டிக்கப்பட்டான் – இன்றோ !! ???  பரிதாப நிலை – மக்கள் சோரம் போகிறார்கள்...

.... அடையாளத்தையும் அற்புதத்தையும் தேவனுடைய பெயரில் நடத்தி காண்பித்தாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு தேவனாகிய கர்த்தர் சோதிக்கிறவர். (உபா. 13:2-3)

நமக்கு தேவன் சொன்ன வசனம் சொந்த தாய் மொழியில் இருக்கிறது. இந்த வசனத்தை கொண்டு தான் நியாயந்தீர்க்கப்போகிறார் – அப்படியிருக்கும் போது வேதத்தில் சொல்லப்படாத ஏகப்பட்ட விஷயங்களை இன்று ஆராதனை என்ற பெயரில் தொழுகையில் எவ்வளவு கூத்துகள் நடக்கிறதென்பதை நீங்களே நிதானித்துக்கொள்ள வேண்டும்.

ஆவியானவர் பெயரில் – நடனம்
ஆவியானவர் பெயரில் – குத்தாட்டம்
ஆவியானவர் பெயரில் – தேவ தூதர் மொழி என்று பிதற்றிக்கொண்டு புரியாததும் அர்த்தமில்லாத வார்த்தைகளால் மிளிரிக்கொள்வது..

இவையெல்லாம் நமக்கு எச்சரிப்புகள் !!

சத்தியத்தை கடைபிடித்து – தேவனுக்கு பயந்து அவரை பக்தியோடும் பயத்தேடும் நடுக்கத்தோடும் தொழுது கொள்வோம். (எபி. 12:28-29, சங். 2:11, 89:7, 1பேதுரு 1:17, வெளி. 15:4, சங். 76:7-11, லூக். 12:4-5, மத். 10:28, எரே. 10:7)

எல்லா குறிப்பு வசனங்களையும் வாசிக்கவும்.. 
 
*எடி ஜோயல் சில்ஸ்பி* 
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
 
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
 


*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக