#231 - *லூக்கா
12:51-53 - பூமியில்
சமாதானத்தையல்ல பிரிவிணையை உண்டாக்க வந்தேன் என்கிற இந்த பகுதியை விளக்கவும்*.
*பதில்:*
கிறிஸ்துவானவர்
சமாதான பிரபு (ஏசா. 9:6)
அவர் நிமித்தமாய்
எல்லா சமாதானமும் இருக்கும் - ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; (ஏசா. 11:6)
பூமியிலே சமாதானம்
இருக்கும் (லூக். 2:14)
என்று வேதத்தில்
பார்க்கும் போது – இந்த வசனங்கள் எதை குறிக்கிறது?
தான் வந்து
இப்படி பிரிவினையை உண்டாக்குவதாக அவர் சொல்லவில்லை. இந்த வசனங்கள் மீகா 7:6ல்
குறிப்பிட்டபடி தன்னுடைய வரவினால் இந்த விளைவுகள் உண்டாகும் என்று சொல்கிறார்.
அனைவரும் அவரை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே கிறிஸ்துவின் நிமித்தம் பிரிவுகள்
இருக்கும். தகப்பன் ஏற்றுக்கொண்டால் மகன் முடியாது என்பான். தாய்க்கும் மகளுக்கும்
இடையில் கூட கருத்து வேற்றுமை கிறிஸ்துவின் நிமித்தம் இருக்கும் என்று சொல்கிறார் –
இந்த உண்மையை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோமே !!
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக