#228 -*சபையை நடத்துகிறவரை பாஸ்டர் என்று அழைக்கிறோம். ஆனால் அவர் மனைவியையும் பாஸ்டரம்மா என்று அழைப்பது சரியா?*
*பதில்*:
மேய்ப்பர், பாஸ்டர், கண்காணி (பிஷப்), மூப்பர் (Elder), இவை எல்லாம் ஒரே அர்த்தமுடையவை.
ஆனால் – சபைகளில் பாஸ்டர் என்று ஒருவரும் பிஷப் என்று இருவரும் மூப்பர் என்று ஒருவரும் தனிதனியே அர்த்தமற்று நியமிக்கப்படுவது கேலிக்கூத்து !!
ஒரு வசனத்திற்கு உடனடி விளக்கம் அளிக்கக்கூட தகுதியில்லாதவர்களும் இப்போது தங்களை பாஸ்டர் என்று மற்றவர் அழைக்கும்படி விரும்புவது காலக்கொடுமை !!
1தீமோ. 3:1-7, தீத்து 1:5-9 தகுதியுடையவர் தான் பாஸ்டராகவோ/மேய்ப்பர்/ கண்காணி/பிஷப்/மூப்பர்/Elder சபையில் நிர்ணயிக்கப்பட்டு பணியாற்ற முடியும். இந்த அடிப்படையில் வராத எவரும் தேவனுடைய சபையில் நிராகரிக்கப்பட்டவர்களே !! – கொஞ்சம் கடினமாக இருந்தாலும் – தேவனுடைய வார்த்தை பட்டயமாயிற்றே..
பாஸ்டரே பிரச்சனை இதில் பாஸ்டரம்மாவும் சேர்ந்திருக்கிறார்கள் !!
முதல் அமைச்சரின் மனைவியையோ
பிரதம மந்திரியின் மனைவியையோ
ஐ.ஜி யின் மனைவியையோ
எம்.எல்.ஏ வின் மனைவியையோ
முதல் அமைச்சரம்மா, பிரதம மந்திரியம்மா, ஐ.ஜியம்மா, எம்.எல்.ஏ அம்மா என்று அழைப்பதில்லை !! இவர்களுக்கு மாத்திரம் யார் அந்த உரிமையை கொடுத்தது??
மேலும் – ஆண்கள் மத்தியில் பெண்கள் பேசக்கூடாது (போதிக்க) என்று வேதம் சொல்கிறது. ஆண்கள் மத்தியில் பெண்கள் போதிப்பது வேதத்திற்கு முற்றிலும் முரணானது.
வசனம் தெளிவாக இருக்கிறது – வாசித்து தொிந்து கொள்ளவும். 1 கொரி. 14:34-35, 1தீமோ. 2:12
இந்த பதிவை படித்ததும் சிலர் நம் குழுவில் இருந்து வெளியேறலாம் – ஆனாலும் சொல்வது என் கடமை.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக