வியாழன், 13 ஜூன், 2019

#227 - எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான் என்று அப். 7:14லும் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள் என்றும் உபா. 10:22ல் உள்ளதே?

#227 - *எகிப்திற்கு போன  இஸ்ரவேலரின் எண்ணிக்கை எவ்வளவு?*

ஸ்தேவான் சொன்னது - பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்து பேரை அழைக்க அனுப்பினான். அப். 7:14


மோசே சொன்னது - உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள், இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார் - உபா. 10:22

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதே எவ்வாறு இதை புரிந்துகொள்வது?

*பதில்:*
பல நபர்கள் மூலமாக வேதாகமம் எழுதப்பட்டாலும் – எழுதி மூல நபர் ஒருவரே (2தீமோ. 3:16)

சிலவற்றை சிலர் முரண்பாடு என்று சுட்டிக்காட்டினாலும் – நம் வேதாகமம் மிக மிக நேர்த்தியானதும் தேவனால் எழுதப்பட்டவை ஒரு போதும் தவறானவையாக இருக்கவே முடியாது என்பதால் - வித்தியாசத்தை சிறிது யோசித்தோமானால் புரிந்து கொள்ளலாம்.

ஆதியாகமத்தில் சொன்னது – எகிப்திற்கு உள்ளே சென்றவர்களை

ஸ்தேவான் சொன்னது – எழுபத்தைந்துபேரை அழைக்கும்படி சொன்னது.. எகிப்தில் எப்பிராயீமிற்கும் மனாசேக்கும் குழந்தைகளும் இருந்தார்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக