#226 - *சாத்தானை எப்படி மேற்கொள்வது?* சாத்தானை
நம்மிடையே வராமல் இருக்க இயேசுவின் முலம் தேவன் நம்மை காப்பாற்ற செய்தார், ஆனால் சாத்தானை நாம் அதனுடைய தூண்டும் பாவங்கள்
அனைத்தும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இத பற்றிய விபரம் கொடுங்கள் சகோதரா. எப்படி
மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கூறவும் சகோதரா.
*பதில்:*
சோதனை என்பது இருவகை.
தமிழாக்கத்தில் 2 வகைக்கும் ஒரே வார்த்தை உபயோகப்படுத்தப்படுவதால்
பல நேரங்களில் அதை நாம் வகைபடுத்துவதில்லை.
முதல் வகை -– நம் விசுவாசம் பரீட்சிக்கப்படும் சோதனை. இதில்
ஒருவர் தேர்ச்சி பெறும் போது – அடுத்த கட்டத்திற்கு வளருகின்றனர். (யாக். 1:12)
இரண்டாம் வகை – நாம் செய்த தவறான செய்கையினால் வரும்
பிரச்சனையான சோதனை. இதை நாம் சரிசெய்து கொண்டாலன்றி மீளுவது கிடையாது (யாக்.
1:13-16)
தாவீது வாழ்நாள் முழுவதும் வெற்றி வீரணாக இருந்தார் என்றால்
– வாழ்நாள் முழுவதும் போராடினார் என்றும் பொருள் !!
வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்பதன் பொருள் – போராட்டமும்
சந்தித்துக்கொண்டே தான் இருப்போம் !!
தேவபக்தியாய் நடக்க விரும்பும் அனைவரையும் விழ வைப்பதற்கு சுவாசம்
உள்ள வரை பிசாசு முயற்சித்துக் கொண்டே தான் இருப்பான் (2தீமோ. 3:12, எபே. 6:10-12)
அவைகளை மேற்கொள்ள நமக்கு கீழ்கண்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது..
1- நம் மானம் காக்கப்பட கட்டவேண்டிய பெல்ட் - சத்தியம்
2- மற்றவர்கள் நம்மை குத்திவிடாமல் / குற்றப்படுத்தாமல் இருக்க அணிய வேண்டிய மார்பு கவசம் – நீதி
3- சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள்
கால்களில் அணிந்து கொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள்.
4- சாத்தான் எறியும் அம்புகளை தடுக்கும் வண்ணம் வேண்டிய கேடயம்
– தேவன் மீதுள்ள நம்பிக்கை.
5- தலை தப்பித்துக்கொள்ள போட வேண்டிய ஹெல்மட் – இரட்சிப்பு (ஞானஸ்நானத்திற்கு
பின்பு)
6-பிசாசை எதிர்த்து போராட நமக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஆயுதம் –
தேவ வசனம் !!!
ஆதார வசனங்கள் எபே. 6: 13-17)
எந்நேரமும் – நம் வாயும் இருதயமும் தேவனுடைய தொடர்பில்
இருக்கவேண்டிய அவசியம் (எபே. 6:18)
போராட்டம் / சோதனை வந்ததும் அது எந்த வகை என்று ஆராய
வேண்டும்.
முதலாவது வகை என்றால் – ப்ரோமோஷனுக்காக சந்தோஷத்தோடு அதை
வசனத்தின் படி எதிர்கொள்ளவும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக