#225 - *இன்றைக்கு அனைத்து திருச்சபையிலும் எழுப்புதல்* என்ற வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது ஆனால் எழுப்புதல் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லை இதனை எவ்வாறு எடுத்துகொள்வது அல்லது எழுப்புதல் என்ற வார்த்தைக்கு நிகராக வேதாகமத்தில் ஏதேனும் வார்த்தை உள்ளதா? விளக்கம் தரவும்
*பதில்*:
இந்த வார்த்தை மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது உண்மை தான்.
ஏன் எதற்கு என்று அறியாமலேயே *எழுப்புதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்*.
சத்தியம் சொல்லப்படாத இடங்கள்,
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத ஜனங்கள் மத்தியில் சுவிசேஷம் எடுத்து செல்லுதல்,
சத்தியம் அறியாதவர்களிடத்தில் ஒரு முன்னேற்றம்,
கிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்படிதல்,
தங்கள் கைகளில் இருக்கும் வேதத்தில் சொல்லபடாதவைகளின் பழக்கத்தின் நீக்கம்,
அன்பில் வளருதல்,
ஐக்கியத்தில் மேம்படுதல்,
என்று *எந்த மாற்றமும் இல்லாமல் எழுப்புதல் என்ற பெயரில்*;
*ஸ்பீக்கர் பாக்ஸ் வளர்ச்சி பெற்றிருக்கிறது
*ஜால்ராவும் மேளமும் போய் பொிய ட்ரம் செட் / சிந்தசைஸர் வந்திருக்கிறது.
*அதிகமதிகமான வாத்தியக்கருவிகள் கூடியிருக்கிறது
*பிரசங்கத்தின் நேரம் குறுகி பாடல்களின் நேரம் கூடிவிட்டது.
*சில இடங்களில் பிரசங்கமே இல்லை வெறும் பாடல் ஆராதனை
*சிலர் ஆராதனை மேளா நடத்துகிறார்கள் !!
*தனி பாடகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
* ஆட்டம் கற்றுத்தருவதற்கு நடன ஆசிரியரும் நியமிக்கப்படுகின்றனர் !!
* வேதத்தின் சத்தியத்தை அறியாத பாடகர்கள், பைபிளின் பெயரால் ஊழியர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு மேடை ஏறி உலகம் சுற்றுகிறார்கள்.
* டான்ஸ் ஆட கற்றுக்கொடுக்கிறார்கள்
* கூறையை பிய்த்துக்கொண்டு போகும் அளவிற்கு மிக அதிகமான கூச்சல்
* கிறிஸ்தவனல்லாதவன் நுழையவே பயப்படும் அளவிற்கு எல்லோரும் சேர்ந்து கதறுகிறார்கள்..
* ஆண்கள் கூடியிருக்கும் இடத்தில் மேடையில் பெண்களின் ஆதிக்கம்
*இவையெல்லாம் தான் எழுப்புதல் என்றால் அது வீண் மற்றும் 100 சதவீதம் வேதத்திற்கு முரணானவை* !!
1கொரி. 14:23-35 - நிதானமாய் வாசித்து புரிந்து கொள்ளவும்.
இவைகள் அனைத்தும் கோதுமை மணி என்ற சபை பெயரில் இடையே வளர்ந்து செழித்திருக்கும் கோதுமையைப்போன்ற களைகள். சத்தியத்தில் சொல்லப்படாதவை யாவும் அறுவடையில் வேறோடே பிடுங்கப்படும் !! அவர்கள் விரும்பும் அக்கினி ஞானஸ்நானமும் பெற்றுக்கொள்வார்கள் !! மத். 13:25-30, மத். 3:11-12
வேத சத்தியத்தை உணர்ந்து
உணர்ச்சிகளை எழுப்புதல் என்று மார்தட்டிக்கொள்ளாமல் சத்தியத்திற்கு கீழ்படியவேண்டும்.
மனுஷகுமாரன் வரும்போது விசுவாசத்தை காண்பாரோ ?? (லூக்கா 18:8)
மனுஷகுமாரன் வருவதற்கு முன்னரே உணர்வடைந்து சத்தியத்திற்கு திரும்பினால் தங்கள் ஆத்துமாவை அக்கினி ஞானஸ்நானத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கிறிஸ்துவின் ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக