செவ்வாய், 11 ஜூன், 2019

#221 - கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரத்தில் பச்சை குத்திக்கொள்ளலாமா?

#221 - *கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரத்தில் பச்சை குத்திக்கொள்ளலாமா?*

*பதில்:*
புறமதத்தினர் தங்கள் சரீரங்களை கீறிக்கொள்ளும் பழக்கமும் தங்கள் தெய்வங்களின் பெயர்களை எழுதிக்கொள்ளும் பழக்கமும் இருந்தது.

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட பொழுது – எகிப்தியரின் எந்த பழக்கத்தையும் கை கொண்டு விடகூடாது என்று தேவன் கட்டளைகளை கொடுத்தார்.

அதில் இதுவும் ஒன்று..

லேவி. 19:28 .... அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.

பச்சை குத்திக்கொள்வது, தாடியை சவரம் பண்ணுவது, மொட்டை அடிப்பது என்று இவை யாவுமே அவர்களுக்கு தடுக்கப்பட்டவை தான் (லேவி. 21:5; உபா. 14:1; 1இரா. 18:28; எரே. 16:6, 48:37)

புதிய ஏற்பாட்டில் – குறிப்பாக இதை குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆனாலும், சில முக்கியமான தகவல்களை நாம் கவனிக்க தவறக்கூடாது.

கிறிஸ்தவர்களாக – நாம் புதிய ஏற்பாட்டின் கீழ் வரும்போது, என்னுடைய கீழ்கண்ட கூற்றுகளை தெரிவிக்க விரும்புகிறேன்:

1-    ஒரு படத்தையோ எழுத்தையோ பச்சை குத்திக்கொள்ளும் போது – அது நிரந்தரமாகிவிடுகிறது. நம் சரீரம் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பி ரசித்து நமக்கு கொடுத்திருக்கிறார் – அதை நாம் கெடுத்து விடுகிறோமே – 1கொரி. 12:18

2-    எந்த ஒரு படத்தையும் பச்சை குத்திக்கொள்ளும் போது – அவை எப்படியாயினும் ஒரு விக்கிரகத்திற்கு ஒப்பாக மற்றவர்கள் கருதுவதற்கு நாம் காரணமாகி விடலாம் – இந்திய வம்சத்தில் உள்ள மதங்கள் சுமார் 30 கோடிக்கும் மேல்பட்ட தெய்வங்களை வணங்குகிறார்களல்லவா?  நாம் எந்த நோக்கத்தில் குத்திக்கொண்டாலும் – அது மற்றவர்களை தவறான பாதையில் நடத்தப்படுவதற்கு நாம் இடங்கொடுக்க கூடாது (2கொரி. 6:3)

3-    மேலும் உலக வழக்கப்படி, தற்போதும் கூட – சரீரத்தில் பச்சை குத்திக்கொள்பவர்களை சமுதாயம் சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பது கிடையாது. மதுவிற்கு அடிமையானவர்கள் அல்லது போதை பொருளுக்கு அடிமையானவர்கள் பெரும்பாலும் பச்சை குத்திக் கொள்வதை நாம் பார்க்கிறோம.

4-    மற்றவர்களை கவர வேண்டும் அல்லது ஈர்க்க வேண்டும் என்ற நோக்கம் பிரதானமாக பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏன் ஏற்படுகிறது. சரீர தோற்றத்தை வைத்து நாம் முற்படாமல், நம் நற்காரியங்களின் மூலம் நிச்சயமாக அநேகரின் இருதயங்களை நாம் சம்பாதிக்க முடியும்.

5-    நீதி. 29:23 மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.

6-    கொலோ. 3:17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

புதிய ஏற்பாட்டில் பச்சை குத்தலாம் என்றோ குத்தக்கூடாது என்றோ சொல்லவில்லை. ஆனால் பச்சை குத்திக்கொள்வது எந்த வகையிலும் நன்மையில் முடியாது என்பது மேலே உள்ள 6 குறிப்புகளில் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக