#217 - *ஊழியகாரர் மேல் கோபம் கொண்டு சபைக்கு வராமல் இருப்பது & இல்லையென்றால் வேரொரு சபைக்கு செல்வது சரியா???*
ஏனென்றல் ஊழியகாரர் சில தவறுகள் செய்து இருக்கிறார் ...சபையில் திக்கற்ற பிள்ளைகளை விசாரிப்பதில்ல அது போன்ற தவறுகளை அவர் செய்ததால் என் சபையில் ஒரு குடும்பம் வரவில்லை...
ஊழியகாரர் செய்த தவறுக்கும் சபைக்கு வராமல் இருக்கும் அந்த குடும்பதுக்கு நான் என்ன சொல்ல வேண்டும்???
*பதில்*:
ஊழியர் என்பவர் சகல ஒழுக்கத்திலும் வளர்ந்திருப்பது அவசியம் (தீத்து 1:6-9).
ஊழியம் செய்பவர்களும் மனிதர் தான். மேலும் சபையாரை விட ஊழியர்களுக்கு போராட்டம் அதிகம் (2 கொரி 1:4)
சபையாருக்காக ஜெபிப்பவர்கள் அதிகம். ஊழியருக்காக ஜெபம் ஏறெடுக்கப்படுவது குறைவு.
சபையில் ஆத்துமாக்கள் பெருகிய போது தங்கள் மத்தியில் இருக்கும் சிலர் சரியாக விசாரிக்கப்படவில்லை என்ற குறை எழுந்த போது – அந்த குறையை வெளியே சொல்லி முறையிட்டனர். ஆகவே அந்த பிரச்சனைக்கு தீர்வு வந்தது (அப். 6:1-3)
சபைக்கு ஊழியர் அல்ல ஊழியர்கள் இருக்க வேண்டும் (பன்மை).
விசாரிப்பு என்பது போதகனுடைய வேலை அல்ல.
One Man Show போல சபை இருந்தால் இப்படிபட்ட பிரச்சனைகள் நிச்சயம் வரும். அது தேவனுடைய சபையின் சட்ட அமைப்பு அல்ல.
உங்களுடைய இந்த சூழ்நிலையில் நீங்கள் செய்யவேண்டியவை:
1- பாதிக்கபட்டவர் நேரிடையாக வெளியே தொியபடுத்தவேண்டும்.
2- ஊழியர் கேட்காத பட்சத்தில், அதை சபை மூப்பருக்கு தொியபடுத்தி விசாரிப்புக்காரரை ஏற்படுத்த வேண்டும்.
3- எதற்கும் சரிவராத பட்சத்தில், ஊழியரின் தன்மை தீத்து 1:6-9ன் படி பரிசோதிக்கப்பட வேண்டியது
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக