வெள்ளி, 31 மே, 2019

#186 - மத்:21:12,13 அடிப்படையில் ஆலயம்/ஜெபகூடம் காலனி அணியலாமா ?

#186 - *மத். 21:12,13 அடிப்படையில் ஆலயம்/ஜெபகூடம் காலனி அணியலாமா ?*

வசனம் - மத். 21:12,13 அடிப்படையில் ஆலையம்/ஜெபகூடம் காலனி அணியலாமா என்ற கேள்விக்கு பதில் வழங்குமாறு வேண்டுகிறேன்.

உங்களது  #172ம் கேள்விக்கான விடையை அறிந்து கேட்கப்படும் கேள்வி இது.
 
*பதில்:* 
எருசலேம் தேவாலயம் என்பது பல பிரகாரங்களை கொண்டது.
உள் அரங்கம் வெளி அரங்கம் என்றும் உள்ளது.

நீங்கள் குறிப்பட்ட இந்த வசன பகுதி ஜெபம் நடைபெறும் குறிப்பட்ட வளாகத்தில் அல்ல - ஆலயத்தின் வெளிபுறத்தில் (சுற்று புறத்தில்) நடக்கும் சம்பவங்கள். கூடுமான வரை இந்த சம்பவம் புறஜாதிகளின் வாசலில் நடைபெற்றிருக்க வேண்டும் (The Court of Gentiles). வரைபடத்தை காணவும். (புரிந்து கொள்வதற்காக மட்டும்)

பலிகளுக்கு தேவையானவற்றை இங்கு விற்பதற்காக ஆலய வளாகத்தில் பகுதிகள் அனுமதிக்கபட்டது. ஆனால் அதை காலபோக்கில் ஆலயத்தின் முக்கியத்துவத்தை மறந்து பொது அங்காவடி போல மாற்றிவிட்டனர்.

யாத். 3:5ல் பாதரட்சையை கழற்ற சொல்லி தேவன் மோசேயிடம் சொல்வதை காண்கிறோம்.

பின்னர் – யோசுவா 5:15ல் யோசுவாவிடமும் அதே போல சொல்லப்படுகிறது.

அது மாத்திரமல்லாமல் – பஸ்கா சாப்பிடும் போது பாதரட்சை அணிந்திருக்கவேண்டும் என்றும் காண்கிறோம் (யாத். 12:11)

தமிழ் வேதாகமத்தில் 36முறை பாதரட்சையை குறித்து பல சூழ்நிலைகளில் பார்க்க முடிகிறது. ஆலய வளாகத்தினுள் அணிந்திருந்தார்களா அல்லது அவை விலக்கப்பட்டவையா என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

புதிய ஏற்பாட்டின் காலத்தை பொறுத்தவரை – பரிசுத்தம் என்பது இருதயத்திலுள்ளது. பரிசுத்த என்பது (ஸ்தலம்) இடத்திற்குறியதல்ல.

Holy is not for the space but in the Heart.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக