சனி, 25 மே, 2019

#175 - தேவனுடைய பெட்டி கீழே விழுந்து விடக்கூடாதே என்று தானே ஊசா பிடிக்கிறார் அப்புறம் ஏன் தேவன் அவரை அடிக்க வேண்டும்?

#175 - *ஒரு சந்தேகம்  2 சாமுவேல் 6;6-8 வசனங்களில்  தேவனுடைய பெட்டி கீழே விழுந்து விடக்கூடாதே என்று தானே ஊசா பிடிக்கிறார் அப்புறம் ஏன் தேவன் அவரை அடிக்க வேண்டும்?*

*பதில்*:
தேவன் சொல்லாததை செய்த போது தண்டனை உடனே கிடைத்த காலம் பழைய ஏற்பாடு.

பெட்டியை தொட்டதனால் ஊசா என்கிற ஒருவர் செத்தது மாத்திரமல்ல, அனுமதி அல்லது தகுதியில்லாமல் வெறுமனே எட்டிப் பார்த்த 50,700 பேரும் இறந்து போனார்கள் (1சாமு. 6:19).  

தகுதியில்லாமல் தங்களிடத்தில் வர அனுமதித்த ஊர்களில் உள்ள அனைத்து ஜனங்களும் – வாதிக்கப்பட்டார்கள். அநேகர் மரித்தார்கள் (1சாமு. 5:8-12)

நம் தேவன் சர்வ வல்லமையுள்ளவர், ஜீவனுள்ளவர், மகத்துவமுள்ளவர். எந்த காரியத்தையும் எப்படி செய்யவேண்டும் என்று மிக நேர்த்தியான கட்டளையை கொடுத்திருக்கிறார்.

கர்த்தருடைய பெட்டியை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று கட்டளை உள்ளது.

1. சீத்தின் மரத்தால் தண்டுகள் செய்து கொண்டு போகப்பட வேண்டும் - யாத். 37: 5

2. யாரும் காணாத வகையில் பெட்டியை மூட வேண்டும் – எண். 4: 5-6

3. குறிப்பிட்ட குடும்பத்தினர் மட்டுமே கர்த்தருடைய பெட்டியை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர் – எண். 4:15

எப்படி இயேசுவை சுமந்து செல்லும் படகு புயலில் கடுமையாக உலுங்கியபோதும் முழுகிவிடவில்லையோ, எருதுகள் தடுமாறினதேயன்றி சரிந்துவிடவில்லை.  (மத் 8:24-27)

கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கத் தவறிய சீடர்களைப் போலவே, ஒருவேளை தன் உதவி தேவனுக்கு அவசியபடுகிறதோ என்று ஊசாவும் நினைத்துவிட்டார்.

இத்தனை நாள் அவர் வீட்டிலேயே அந்த பெட்டி இருந்திருந்தாலும் கர்த்தருடைய பெட்டிக்கேற்ற  பரிசுத்தத்தை ஒரு நாளும் எவராலும் மீற முடியாது (2சாமு. 6:3)

ஊசாவை இழந்த பின்னர், எப்படி, யார், அந்தப் பெட்டியை முறையாகக் கொண்டு வரவேண்டும் என்று தாவீது கற்றுக்கொண்டார் – 1நாளா. 15:1-2, 12-15

*தேவன் எப்படிச் சொன்னாரோ அந்த வண்ணமே அந்த பிரகாரமே அந்த முறைப்படியே செய்யவேண்டும்*. மிக சிறிதளவு பிசகினாலும் அதை தேவன் ஏற்றுக்கொள்ளமாட்டார் மாறாக தண்டிக்கிறவர்.

பேசுவதற்கு பதில் மலையை அடித்து வாக்குத்தத்த தேசத்திற்குள்ளே நுழையமுடியாமல் போன  மோசேயின் சம்பவம் நமக்கு நினைவில் இருக்கவேண்டும். எண். 20:7-12

லேவி புத்திரர் பெட்டியை மூடிமுடித்தபின்னர் கோகாத்தின் பத்திரர் அதை சுமக்க வேண்டும். இந்த இரண்டுமே ஊசாவின் சம்பவத்தில் மீறப்பட்டது. (1நாளா. 6:29, எண். 4:15)

ஞானஸ்நானத்திற்கு பின்னர் இரட்சிப்பு என்று வேதம் சொல்லியிருக்க, இக்காலத்தில் இம்முறையை “இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்” என்று மாற்றி சொல்லிக்கொண்டு அலையும் இந்த கால போதகர்களின் நிலமையை நினைத்து பார்க்க வேண்டும் (மாற்கு 16:16).

கிறிஸ்தவம் என்கிற பெயரில் புதிய ஏற்பாட்டு சத்தியத்தை முழுவதும் குழிதோண்டி புதைத்து விட்டு, தங்கள் வீணான ஆடம்பரங்களையும், கற்பனைகளையும், தொழுகையில் உட்புகுத்தி, வீதியில் ஆடுவதைப்போல கூடுகையில் குதித்தும், துள்ளியும், மேளம் கொட்டியும், உளரியும்,  கூச்சலிட்டும், ஆடிக்கொண்டு கிறிஸ்துவின் பெயரில் நடக்கும் கூட்டங்களின் முதலாளிகள் இதை நினைவில் கொள்ளவேண்டும்...

கிருபையின் காலம்... மனந்திரும்ப இன்றும் வாய்ப்பு உள்ளது (எபி. 3:12-15)
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக