செவ்வாய், 21 மே, 2019

#169 கேள்வி: திருமணத்தின் போது ஜாதி பார்க்கலாமா?

*#169 கேள்வி: திருமணத்தின் போது ஜாதி பார்க்கலாமா?* திருமணத்தின் போது அவர்களது குலத்தை வைத்து உறவுமுறை தெரிந்துகொள்ள ஜாதி பார்ப்பது சரியா தவறா அல்லது வேதத்தில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? விளக்கம் தரவும்

*பதில்:*
ஜாதி என்கிற இந்த பிரிவு – இந்து மதத்தினரின் கோட்பாடுகளில் வந்தவை.
இந்தியர்களாகிய நாம் அந்த மரபுகளை அறிந்ததால் – அறிந்தும் அறியாமலும் இந்த பிரச்சனையில் தலையிட்டுக்கொள்கிறோம்.

இந்துக்கள் ஜாதி – குலம் பிரிக்கும் போது அவரவர் வாழ்க்கை தரத்தையும், செய்யும் வேலையையும் குடும்ப பழக்கவழக்கங்களையும் அடிப்படையாக வைத்து பிராமணன் ஷத்திரியன் வைசியன் சூத்திரன் என்று 4 வகையாக பிரித்தனர்.

உட்பிரிவாக சுமார் மொத்தம் 181 வகைகளை காணமுடிகிறது.

அரபு நாடுகளில் இஸ்லாமியர்கள் தங்கள் பெயரில் தங்கள் குடும்ப பெயரை சேர்த்து வைப்பார்கள் (உதாரணத்திற்கு அல் கலிஃபா, அல் பலூசி, அல் ரியாமி என்று) – இது ஜாதியை அல்ல அவரவர்கள் மூதாதையர்கள் வழிமுறையை / குடும்ப அடையாளத்திற்காக.

*இப்போது வேதத்திற்கு ஒப்பிடுவோம்:*
ஆபிரகாம் தன் மகனுக்கு பெண் எடுக்கும் போது தன் இனத்தாரிடத்தில் போய் பெண் கொள்ள வேண்டும் என்று உறுதியாய் இருந்தார் (ஆதி 24:4)

ஆபிரகாம் தற்காலம் வாழ்ந்து வந்த இடம் (ஆதி 23) தேவனை தொழுது கொள்ளாத ஜனம்.

தேவனை சரியாய் / முறையாய் தொழுது கொள்ளும் எந்த குடும்பமும் – சீரும் செம்மையுமாய் வேதாகமத்தின் படி தங்கள் பழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வர்.

விக்கிரகஆராதனையிலோ வேதத்தை விட்டு கற்பனையான ஆராதனையிலோ தங்கைளை ஈடுபடுத்திக்கொண்டவர்களோடு மணம் முடிக்கும் போது நிச்சயமாக வாழ்க்கையில் தீராத போராட்டம் உண்டு.

திருமணம் செய்து கிறிஸ்துவுக்குள் அவர்களை கொண்டு வந்து காட்டுகிறோம் என்று சவால் விட்டு ஏமாந்தவர்கள் அநேகர். பெண்கள் பக்கம் தான் ஆண்கள் சாய்ந்து போனார்கள். சாலமோன் இராஜா மற்றும் சிம்சோன் வாழ்க்கை பொிய உதாரணங்ள்.

ஜாதி குலம் பார்ப்பது – இந்துக்கள் முறை

கிறிஸ்தவர்கள் – திருமணத்திற்கு மாப்பிள்ளையோ – பெண்னோ – சத்தியத்தில் இருப்பவர்களா என்று பார்ப்பது வேத கட்டளை (2 கொரி 6:14-16)

என்னை பொறுத்தவரை – பெண்னும் மாப்பிள்ளையும் – ஒரே கலாசாரத்தில் / வளர்ச்சியில் இருப்பது வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளில் மேலோங்கி வெற்றி காண்பார்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக