ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சுய பெலனுடன் அனைவருக்கும் சுவிசேஷம்

*சுய பெலனுடன் அனைவருக்கும் சுவிசேஷம்*

by : Eddy Joel Silsbee

 

சகல ஜனங்களையும் நேசிக்கும் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

உலகத்தின் சகல ஜனங்களுக்கும் இரட்சிப்புண்டாகும்படி கிறிஸ்து, இந்த உலகத்தில் பிறந்தார்.

 

இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட நியாயபிரமாணத்தை பூரணமாக ஒரு இஸ்ரவேலனால் 100% கடைபிடிக்க முடியும் என்பதை, தான் கடைபிடித்து நிறைவேற்றிக்காண்பிக்கும் பொருட்டு,  யூதர்களுக்கே தன்னுடைய நேரத்தை முழுமையாக ஒதுக்கினார் இயேசு. கலா. 4:5

 

யூதரல்லாத ஒரு ஸ்திரீ சுகம் வேண்டி அவரிடத்தில் வந்த போது: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். மத். 15:26  (அங்கு கூடியிருந்த பரிசேயசர்களுக்கு புரியும்படியாக சொல்லப்பட்ட வார்த்தை இது)

 

1. தன்னுடைய சீஷர்களுக்கான பயிற்சியில், கட்டளையிட்டுச் சொன்னது:  நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்... என்றார் (மத். 10:5-7)

 

2. தங்களின் வழிக்குத் தேவையான தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது *எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும்வேண்டாம்* என்றார். லூக். 9:3-4

 

சோம்பலும், வயிற்று பிழைப்பிற்கான ஊழியர்கள், இந்த வசன பகுதியோடு நிறுத்திக்கொண்டு தங்கள் காலத்தை தள்ளாமல், தொடர்ந்து வேதாகமத்தை மேற்கொண்டு படிக்கும் போது, கிறிஸ்து, சிலுவையில் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்னர், தன்னுடைய ராஜ்யத்தையும் பிதாவின் நோக்கத்தையும் *வெளிப்படுத்தினதை கவனிக்க வேண்டும்*.

 

3. நீங்கள் *உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும்* அதாவது யூதர்களுக்கு மாத்திரம் என்பதல்லாமல் அனைத்து ஜனங்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்றார். மாற்கு 16:15

 

4.ஊழியத்திற்கு போகும் போது *தனக்கு தேவையானதை தானே கொண்டு போக வேண்டும்* என்பதால் “இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்”; என்றார். லூக். 22:36

 

*புறஜாதியான நம்மை* தேவன் ஆதியிலேயே தெரிந்தெடுத்திருக்கிறார். காலம் வெகு குறைவு என்பதை உணர்ந்து சுவிசேஷத்தை *அனைவருக்கும் அறிவுறுத்துவோம்*.  அப். 15:14, 22:21

 

*வேலை நம்முடையது… செயல் அவருடையது*.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/2starTok5BU

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக