வெள்ளி, 12 ஏப்ரல், 2019

#101 - ஏதேன் தோட்டம் எங்கு உள்ளது? வேத ஆதாரத்தோடு பதிலளிக்கவும்.

#101 - *ஏதேன் தோட்டம் எங்கு உள்ளது? வேத ஆதாரத்தோடு பதிலளிக்கவும்*.

*பதில்*:
எங்கு ஏதேன் தோட்டம் இருந்தது என்று மிக சரியாக யாராலும் கணித்து விடமுடியாது. வேதத்தின் படி, மத்திய கிழக்கு, மெசொப்பொத்தோமியாவில் (ஆதி. 2: 8,10-14) நான்கு நதிகள் இருக்கும் இடத்தில் உள்ளது என்று பார்க்கிறோம் – பைசோன், கீகோன், கியோன், இதெக்கேல், ஐபிராத்து ஆகிய இடங்களில் வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆதி. 3:22-24ல் மனிதன் ஏதேன் தோட்டத்தை (ஜீவ விருட்சத்தின் கனியை) கண்டுபிடிக்காத வகையில், தேவன் அதை அடைத்தார் என்று பார்க்கிறோம்.

ஆயினும், டைகிரிஸ் மற்றும் யூப்ரடீஸின் மெசொப்பொத்தேமியன் பகுதியில் (தற்காலத்தில் ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் பகுதிகள்) ஏதேன் தோட்டத்தின் பொதுவான இடம் பைபிள் கூறுகிறது என்றாலும், சரியான இடம் அறியப்படவில்லை.

நோவா காலத்தின் உலக பேரழிவிற்கு பின்னர் – முழுவதுமாக மறைக்கப்பட்டது என்று ஊர்ஜீதமாக சொல்லமுடியும் (ஆதி. 3:22-24)
தோட்டம் மறைக்கப்பட்டிருந்தாலும், பின்வரும் வேதாகம பகுதியின் படி பார்க்கும் போது ஜீவவிருட்ச மரமானது (கிறிஸ்துவிற்கு ஒப்பனையாக) பரலோகத்தில் இருக்கிறது என்றும் பார்க்கிறோம் (வெளி. 2:7, 22:2)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக