வியாழன், 11 ஏப்ரல், 2019

#97 கேள்வி: பன்றி இறைச்சியை சாப்பிடுவது கிறிஸ்தவர்களுக்கு பாவமா?

#97 *கேள்வி*: பன்றி இறைச்சியை சாப்பிடுவது கிறிஸ்தவர்களுக்கு பாவமா?

*பதில்*:
எதை சாப்பிட வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லாத மிருகம் பன்றி. பன்றிகள் தனக்கு முன் வைக்கப்படும் *எதையும்* சாப்பிடும்.

தென் தமிழகத்தில் கறுப்பு நிற பன்றிகளின் அநுதின ஆகாரத்தை தேடும்படி அவைகளை மேய விடும் இடங்களை கண்டாலே அந்த அதன் தன்மையை நாம் உணரமுடியும்.

இறைச்சிக்கென்று தனியாக வளர்க்கப்படும் பன்றிகளும் பிரத்யேகமாக உள்ளது.

பன்றி இறைச்சி பழைய ஏற்பாட்டின் கீழ் பாவமாக இருந்தது.

பன்றியின் மாம்சத்தை தொடவுங் கூடாது என்ற கட்டளை நியாயபிரமானத்தில் உள்ளது – உபா. 14:8

*நியாயபிரமாண காலத்தில்* அருவருப்பானவற்றை தேவன் குறிப்பிடும் போது பன்றி இறைச்சியையும் சேர்த்து சொல்வதை கவனிக்கவும் – ஏசா. 65:4; ஏசா. 66:17ஏசா. 66:3

பன்றிக்கென்று எந்த பிரத்யேக பழக்கத்தையும் கற்றுக்கொடுக்க முடியாது – 2பேதுரு 2:22

புதிய ஏற்பாட்டு காலத்தில் நாம் இருக்கிறோம்.
அசுத்தமான மிருகங்களை குறித்த சட்டங்கள் முடிவடைந்தன (கொலோ. 2:13-17).

விலக்கப்பட்ட புறஜாதியாரையும் தான் தன் இராஜ்ஜியத்திற்கு அழைத்ததை பேதுருவிற்கு உணர்த்தும்படியாக விலக்கப்பட்ட விலங்குகளை தான் சேர்த்துக்கொண்டதாக தேவன் தெரிவிக்கிறார். (அப். 11: 6-9).

அனைத்து படைத்த அனைத்தும் நல்லதாயிருக்கிறது. (1 தீமோ. 4: 4-5).

சாப்பிடுவதால் தீட்டாகாது.

சாப்பிடும்போது – பார்க்கும் சிலருக்கு அது அசுத்தமாக தோன்ற வாய்ப்பு உள்ளது – ரோமர் 14:14

மற்றவர்களுக்கு இடறலில்லாமல் இருப்பது கிறிஸ்தவனுக்கு அவசியம் – 1கொரி. 8:13

மற்றவர்கள் நம்மிடம் பழகும் தன்மைக்கு நாம் பாத்திரவான்களாக இருத்தல் அவசியம் – கொலோ. 2:16

மருத்துவ ரீதியாக – கடினமான கறிகளை தவிர்ப்பது உடலுக்கு நாம் செய்யும் உபகாரம் !!

மற்றபடி வேதாகம ரீதியாக பன்றி கறி சாப்பிடுவது பாவமல்ல. தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக