புதன், 20 மார்ச், 2019

Daily Dose 20-3-19


சிலுவை நாதர் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

யூதர்கள் பொறாமையினாலே இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் இவ்வாறு சிலுவையில் மரிக்கவேண்டும் என்பதை இயேசு முன்னமே அறிந்திருந்தார்.

அவர் பிறந்ததன் நோக்கமே, இரத்தம் சிந்தி, நம்முடைய பாவங்களுக்காக பலியாக வேண்டும் என்றே !! அது தான் பிதாவின் திட்டம்.

கிறிஸ்து, சிலுவையில் மரித்ததன் மூலம் பிதாவானவர் நமக்கு அருளிய கிருபைகளில் சில கீழே பட்டியலிட்டிருக்கிறது.

அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிகாலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார் (எபி 9:26)

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொண்டார். (கொலோ 1:20)

நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம். (ரோ 5:10)

தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (எபி 9:12)

நமக்காய் பலியான கிறிஸ்து இயேசுவின் மீட்பிற்கு பாத்திரமாய் நாம் நடந்துகொள்வோம்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229


Greetings to you in the name of our Lord Jesus Christ, who was crucified for us.

Jews crucified Jesus by their jealousy. But, Jesus Christ, knew His mode of death from the beginning itself.

Because, shedding blood by His own son as an atonement was the eternal plan by God, The Father’s will to save all mankind.

The following are few listed what we got as Grace from our Father in Heaven, due to the Crucifixion of Christ.

He has come to us at the end of the old order, to put away sin by the offering of himself. Hebrews 9:26

Through him uniting all things with himself, having made peace through the blood of his cross; through him, I say, uniting all things which are on earth or in heaven. Colossians 1:20

When we were haters of God, the death of his Son made us at peace with him (Romans 5:10)

And has gone once and for ever into the holy place, having got eternal salvation, not through the blood of goats and young oxen, but through his blood. Hebrews 9:12.

Let us not despise the salvation and redemption received through Jesus Christ.

*Eddy Joel*
+968 93215440

joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக