திங்கள், 25 பிப்ரவரி, 2019

#69 கேள்வி : இயேசுவோடு உரையாடும் நபர்கள் மோசேயும் எலியாவும் தான் என்று பேதுரு எப்படி தெரிந்துகொண்டார்?

#69 *கேள்வி : இயேசுவோடு உரையாடும் நபர்கள் மோசேயும் எலியாவும் தான் என்று பேதுரு எப்படி தெரிந்துகொண்டார்?*

*பதில்* :
பேதுரு எப்படி அவர்களை அடையாளம் கண்டுகொண்டார் என்று வேதாகமம் சொல்லவில்லை.

ஆகவே எந்த பதிலும் ஒரு யூகம் தான்.

கீழ்கண்ட சாத்தியமான வகைகளை கவனிக்கவும்:

1- இயேசு அவர்களிடம் பேசியபோது பெயரைப் குறிப்பிட்டு பேசியிருக்கலாம். சீஷர்கள் அதைக் கேட்டிருக்கமுடியும்.

2- இயேசு கிறிஸ்து அவர்களோடு பேசிய பேச்சை வைத்து புரிந்திருக்கலாம்.

3- மோசேக்கும் எலியாவிற்கும் சில தோற்றங்கள் வேதத்தில் பார்க்க முடிகிறது. ஒருவேளை அந்த தோற்றத்தில் வந்திருக்கலாம் !!

எடுத்துக்காட்டாக்கு கீழே உள்ள இரண்டு வசனங்களை ஒப்பிடவும் :

ஒன்று - யாத்திராகமம் 34:29 மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே தேவன் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான்.

இரண்டாவது - 2 இராஜாக்கள் 1: 8 அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் ....

4- இவருக்கு செவிகொடுங்கள் என்று பிதாவானவர் அவர்களுக்கு சொன்னது போல – நான்கு சுவிசேஷ புத்தகங்களில் பதிவு செய்யப்படாத ஏதாவது பரலோக அறிவிப்பு இருந்திருக்கலாம். நமக்கு தெரியாது.

5
- இயேசு கிறிஸ்துவே அவர்கள் பெயரை சொல்லியிருக்கலாம். அதுவும் நமக்கு தெரியாது.

6- இயேசுவை மேசியா என்று பேதுருவுக்கு தேவன் பரத்திலிருந்து வெளிப்படுத்தியதைப் போலவே இவர்களையும் புரிந்துகொள்ள தூண்டப்பட்டிருக்கலாம்...

எல்லாமே யூகம் தான் !!

மறைக்கப்பட்டவைகளுக்கு நாம் விலகியிருப்பதை வேதம் நமக்கு போதிக்கிறதே.. (உபா. 29:29)

இந்த அருமையான கேள்விக்காக மிக்க நன்றி சகோதரரே !!
ரொம்ப சிரமப்பட்டேன் !!!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

1 கருத்து:

  1. பதிவிலிருந்து கேட்கப்பட்ட கேள்வி : அவர்கள் கண்டது தரிசனம் என்று வேதம் சொல்கிறது. அந்த தரிசனத்தை அவர்கள் உருவமாக பார்க்கவில்லை.


    பதில்: பேதுருவும் யோவானும் கண்டது தரிசனம் தான் – இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று கிரேக்க பாஷையில் போடப்பட்டிருக்கிறது.
    அந்த தரிசனம் கனவில் அல்ல !!

    பேதுருவும் யோவானும் அந்த தரிசனத்தை தன்னுடைய உயிர்தெழுதல் வரைக்கும் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றார். (மத் 17:9)

    எலியாவையும் மோசேயையும் பார்த்த மாத்திரத்தில், இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த முக்கியத்துவம் எலியா மீதும் மோசே மீதும் அவர்கள் கவனம் திரும்பிய போது வானத்திலிருந்து சத்தம் உண்டாகியது – கிறிஸ்துவுக்கு செவிகொடுங்கள் என்று !! (மத் 17:5)

    நன்றி

    பதிலளிநீக்கு