திங்கள், 21 ஜனவரி, 2019

#54 - ஆவியானவர் எனக்கு எதையாவது வெளிபடுத்தினார் என்று ஒருவர் சொன்னால் - அதை நாம் ஏற்றுக்கொள்ளலாமா?

#54 - *ஆவியானவர் எனக்கு எதையாவது வெளிபடுத்தினார் என்று ஒருவர் சொன்னால் - அதை நாம் ஏற்றுக்கொள்ளலாமா?*

*பதில்*
பலருக்கு - இந்த ஒரு கேள்வி உண்டு.

ஐயோ தேவ ஊழியக்காரர் சொல்லிவிட்டார் ஆகவே நாம் எந்த கேள்வியும் கேட்ககூடாது. தேவன் நமக்கு சொல்ல விரும்புவதை இவர் மூலமாக சொல்லி இருக்கிறார் என்று அப்படியே ஏற்றுக்கொள்வர்.

*வேதம் இதற்கு என்ன சொல்கிறது*?
இயேசு கிறிஸ்து சொன்னதை நாம் நிச்சயம் நம்புவோம்.

யோ. 14:26 - என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, *நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்* என்றார்.

யோ. 16:13-15 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் *தம்முடைய சுயமாய்ப் பேசாமல்*, தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். *அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால்* என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றார்.

மேலும் நாம் யோவான் 20:30-31ல் எந்த மனுஷனும் பரலோகம் போய் சேருவதற்கு தேவையான *எல்லா* ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டு விட்டது. இனி ஆவியானவர் எதையாவது வெளிபடுத்தினால் அதை நாம் வேதத்தில் இருக்கிறதா என்று தேட வேண்டும். நம்மிடம் சொல்லப்பட்டது *வேதத்தில் இல்லை என்றால் "நாம் ஏற்றுக்கொள்ள கூடாது*"

மேலும், வேத வார்த்தையை (அதாவது - தேவனுடைய வார்த்தையை) எடுத்து சொல்வது தீர்க்கதரிசனம்.  அதை சொல்பவர்கள் தீர்க்கதரிசிகள். (வெளி. 1:3)

ஆதி காலங்களில் தேவன் தன்னுடைய சித்தத்தை தன் தீர்க்கதரிசிகள் மூலமாக சொல்லிவந்தார்.. 
 
இயேசு கிறிஸ்து வந்த பின் அதை முடித்து வைத்தார்.  
 
பழைய தீர்க்கதரிசிகள் எவருமே உங்களுக்கு;
வயித்துல கட்டி, இருதயதுல ஓட்டை, இரத்த போக்கு, கை உதறுது, கால் வலியோட துடிக்கிற ஆத்துமாவே உன்னை பார்த்து ஆண்டவர் உரைக்கிறார் என்று எந்த காரியத்தையும் அதவாது மாம்சத்தின் கிரியைகளை தீர்க்க தரிசனமாக சொல்லாமல், *தேவனுடைய திட்டத்தையே தீர்க்கதரிசனமாக சொன்னார்கள் / வெளிபடுத்தினார்கள்*.

சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று நினைத்து பாதை தவறி விட வேண்டாம் - கனிகளினால் அறியுங்கள் !!

பிதாவை ஒருவனும் கண்டதில்லை.

ஆகவே தினமும்.. மேலே போய் பார்த்து விட்டு நம் தகவல்களை நேரடியாய் கொடுத்து விசாரித்து இப்போ தான் திரும்பி வந்தேன் என்று சொல்கிற பொய் மூட்டைக்காரர்களையும் கிறிஸ்தவ வார்த்தையின் வியாபாரிகளையும் நம்பி பரலோகத்தை தொலைத்து விடாதீர்கள்.

நான் எழுதியது கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.. வேதத்திற்கு கீழ்படிய வேண்டியது தான் நம் தலையாய கடமை.

எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் !! 1கொரி. 4:6
சொல்லபடாதது அப்படியே இருக்கட்டும். உபா. 29:29

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக