வெள்ளி, 21 டிசம்பர், 2018

Daily Dose 21-12-18 (Tamil)

சமாதானமாய் வழிநடத்தும் நம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சுகமாய் வாழவேண்டும் என்று எகிப்துவிலிருந்து வெளியே வந்த ஜனம், இல்லாததை நினைத்து.. இந்த வனாந்திரத்தில் சாகவா கூட்டி வந்தீர் என்று அவர்கள் கேட்ட பிரகாரமே 2 பேரை தவிர எல்லோரும் மரித்து போனார்கள் !!

முறுமுறுக்கும் போது தேவன் *வன்மையாக நம் மீது கோபப்படுகிறார்*. எண் 11:1

ஜுரம் உள்ளவர்கள் -> கேன்சரால் போராடுபவர்களை கவனிக்க வேண்டும்.

தம்பதியர் -> விதவைகள் வேதனையை பார்க்க வேண்டும்.

பெற்றோர் -> பிள்ளைக்காக ஏங்கும் தம்பதியினரை பார்க்க வேண்டும்.

பணிபுரிவோர் -> வேலை தேடுபவர்களை கவனிக்க வேண்டும்.

ஏழைகள் -> கடன் பாரத்தோடும், வியாதியோடும் தூக்கம் இல்லாமல் பணக்காரர் படும் வேதனையை பார்க்க வேண்டும்.

யார் யாருக்கு, தேவன் எதை கொடுத்து இருக்கிறாரோ, அதில் சந்தோஷப்பட்டு அவருக்கு நன்றி சொல்லி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

கணவனும் மனைவியும் சுவாசத்தோடு  இருப்பதே பெரிய பாக்கியம் என்பதை மறவாதிருங்கள்.

நஷ்டமோ, கஷ்டமோ, வேதனையோ, துன்பமோ, பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ,  எதுவாயினும் – ஆண்டவர் கொடுத்தது நன்மையாக தான் இருக்கும் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லி பாருங்கள் – வித்தியாசத்தை உணருவீர்கள்.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக